27koodarai Vellum

கூடாரை வெல்லும்
சீர் கோவிந்தா
உன்றன்னை
பாடிப் பறைக்கொண்டு
யாம் பெறும் சம்மானம்

நாடு புகழும்
பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே
தோடே செவிப்பூவே

பாடகமே என்றனைய
பல்கலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம்
அதன் பின்னே பாற்சோறு

மூடநெய் பெய்து
முழங்கை வழிவாரக்
கூடியிருந்து
குளிர்ந்தேலோ ரெம்பாவாய்
கூடியிருந்து
குளிர்ந்தேலோ ரெம்பாவாய்



Credits
Writer(s): Andal
Lyrics powered by www.musixmatch.com

Link