Thelivu

உ-உ
உ-உ
உ-உ
உ-உ

கண் பார்த்து காதல் என்னும் சேர்க்கை மெய்யானது
கடல் கடந்து இணைந்த நம் உணர்வு உயிரானது
பொருந்தாத வரிகள் என்றும் கவியில் சேராதது
அது போல தானே இந்த காதல் பொய்யானது

நாம்
அந்த வானும் மண்ணும் போல
ராகம் தாளம் போல
பின்
அந்த வானம் இருண்டது
ராகம் உடைந்தது
அந்த மெய்யை
இரவின் கனாவை போல்
காலையில் தான் அறிந்தேன் (தான் அறிந்தேன்)
பெண்ணே

குறில் ஆக இருந்த போது எங்கும் பறந்த காகம்
உன் பொய்யில் நெடிலாய் ஆன பிறகு இன்பம் எங்கு காணும்
உன்னை விமர்சித்து பாட இந்த மெட்டு அல்ல
என் கடந்த வாழ்க்கை என்று உன்னை ஏற்க நெஞ்சம் சொல்ல
அண்ணார்ந்து பார்த்தேன் நானும், நீல வானில் மேகம்
கொஞ்ச நேரம் நின்று பாரு அதுவும் கடந்து போகும்
வாழ்க்கை ரொம்ப அழகு, நீ அறிந்து புரிந்து பழகு
அறிந்து புரிந்து பிரிந்து போனா முடிஞ்சி போச்சு கிளம்பு

கண் பார்த்து காதல் என்னும் சேர்க்கை மெய்யானது
கடல் கடந்து இணைந்த நம் உணர்வு உயிரானது
பொருந்தாத வரிகள் என்றும் கவியில் சேராதது
அது போல தானே இந்த காதல் பொய்யானது

நாம்
அந்த வானும் மண்ணும் போல
ராகம் தாளம் போல
பின்
அந்த வானம் இருண்டது
ராகம் உடைந்தது
அந்த மெய்யை
இரவின் கனாவை போல்
காலையில் தான் அறிந்தேன் (தான் அறிந்தேன்)
பெண்ணே

முடிவின் தொடக்கம், தெளிவு
ஆயினும் ஈவது இயல்பு
அவ்வாழ்க்கையின் புரிதலோ, ஹும் அழகு
The beginning of an end is clarity
Damn clarity



Credits
Writer(s): Suraj Jesudhan
Lyrics powered by www.musixmatch.com

Link