Manmadhane Nee

மன்மதனே நீ கலைஞன் தான் மன்மதனே நீ கவிஞன் தான்
மன்மதனே நீ காதலன் தான் மன்மதனே நீ காவலன் தான்

என்னை உனக்குள்ளே தொலைத்தேன் ஏனோ தெரியலை
உன்னை கண்ட நொடி ஏனோ இன்னும் நகரல
உந்தன் ரசிகை நானும் உனக்கேன் புரியவில்லை

எத்தனை ஆண்களை கடந்து வந்தேன் எவனையும் பிடிக்கவில்லை
இருபது வருடம் உன்னைப்போல் எவனும் என்னை மயக்கவில்லை
எத்தனை ஆண்களை கடந்து வந்தேன் எவனையும் பிடிக்கவில்லை
இருபது வருடம் உன்னைப்போல் எவனும் என்னை மயக்கவில்லை

மன்மதனே நீ கலைஞன் தான் மன்மதனே நீ கவிஞன் தான்
மன்மதனே நீ காதலன் தான் மன்மதனே நீ காவலன் தான்

நானும் ஓர் பெண் என பிறந்த பலனை இன்றே தான் அடைந்தேன்
உன்னை நான் பார்த்த பின் ஆண்கள் வர்க்கத்தை நானும் மதித்தேன்

எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி ஆடிக் கொண்டே இருக்கிறாய்
எனக்குள் புகுந்து எங்கோ நீயும் ஓடிக்கொண்டே இருக்கிறாய்
அழகாய் நானும் மாறுகிறேன் அறிவாய் நானும் பேசுகிறேன்
சுகமாய் நானும் மலருகிறேன் உனக்கேதும் தெரிகிறதா?

ஒரு முறை பார்த்தால் பல முறை இனிக்கிறாய் என்ன விசித்திரமோ
நண்பனே எனக்கு காதலன் ஆனால் அது தான் சரித்திரமோ
ஒரு முறை பார்த்தால் பல முறை இனிக்கிறாய் என்ன விசித்திரமோ
நண்பனே எனக்கு காதலன் ஆனால் அது தான் சரித்திரமோ

மன்மதனே உன்னை பார்க்கிறேன் மன்மதனே உன்னை ரசிக்கிறேன்
மன்மதனே உன்னை ருசிக்கிறேன் மன்மதனே உன்னில் வசிக்கிறேன்
உன்னை முழுதாக நானும் மென்று முழுங்கவோ
உந்தன் முன்னாடி மட்டும் வெட்கம் மறக்கவோ
எந்தன் படுக்கை அறைக்கு உந்தன் பேரை வைக்கவோ

அடிமை சாசனம் எழுதி தருகிறேன் என்னை ஏற்று கொள்ளு
ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன் அன்பாய் பார்த்துகொள்ளு
அடிமை சாசனம் எழுதி தருகிறேன் என்னை ஏற்று கொள்ளு
ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன் அன்பாய் பார்த்துகொள்ளு

Credits
Writer(s): Vaali, Yuvan Shankar Raaja
Lyrics powered by www.musixmatch.com

Link