Kangalilae (Instrumental)

கண்களிலே கண்களிலே ஒரு கடுகளவு தெரிகிறதே
என் மேலே என் மேலே உன் குறுகுறுப்பு நெளிகிறதே

எனக்கே தான் தெரியாமல்
எனை சிறுக சிறுக இழந்தேன்

கல்லை குளத்தினில் எறிந்தாய்
என் நெஞ்சில் வளையங்கள் செய்தாய்

ஓ தள்ளி நடந்திட விரும்பி
நீ மெல்ல அருகினில் வந்தாய்

முதன் முதலாய் முகவரியாய்
உனை நினைத்தேன் நல்ல முடிவெடுத்தேன்

மேலாடை தொடுமோ மூச்சென்னை தொடுமோ
கை விரல் தொடுமோ கால் நகம் படுமோ

பட்டதை இல்லாமல் பூ போட்டும் இல்லாமல்
நீ வந்து நின்றாலும்
உன் போலே வருமோ

ஓ கண்களிலே கண்களிலே ஒரு கடுகளவு தெரிகிறதே
என் மேலே என் மேலே உன் குறுகுறுப்பு நெளிகிறதே

வண்ண உடைகளில் வந்தால் என் எண்ணம் சிதறுது பெண்ணே
என்னை மறைத்திட்ட போதும் அதை காட்டி கொடுப்பது கண்ணே

ஒரு புறம் நீ மறு புறம் நான்
இடையினில் யார்
வெட்கம் தடுப்பதை பார்

எங்கே நான் சென்றாலும் என் பாட்டில் நின்றாலும்
பின்னாலே நீ வந்தாய் பேசாமல் ஏன் சென்றாய்

கர் காலம் போல் இன்று சங்கீத சொல் ஒன்று
நீ வீசி சென்றாலும் போதாதோ எனக்கு

கண்களிலே கண்களிலே ஒரு கடுகளவு தெரிகிறதே
என் மேலே என் மேலே உன் குறுகுறுப்பு நெளிகிறதே

எனக்கே தான் தெரியாமல் எனை சிறுக சிறுக இழந்தேன்



Credits
Writer(s): G.v. Prakash Kumar, Thamarai
Lyrics powered by www.musixmatch.com

Link