Jai Bhim (Tamil Rap Song) (feat. Kutty Dinesh, Anand Castro & RJ Prasath)

Hey, He is a fighter
Constitution writer
Fighting for the oppressed people was his only life time job
Be educate and organise and agitate to claim your rights take him as a hope of life
His name is Dr.Ambedkar

எங்கெங்கும் அட சாதி வியாதி,கேட்க இல்லை ஏதும் நாதி
ஆயிரம் வருடம் அடிமை வாழ்க்கை, எங்கும் இல்லை விடுதலை வேட்கை
வந்தார் ஒருவர் சிங்கம்போல புரட்டிப் போட்டார் நம் வரலாற
மனிதனை மனிதனாய் மதிக்கச் சொன்னார்
புரட்சிப் பாதையில் நடக்கச் சொன்னார்

மனுநீதி கொள்கையாலே கொடுமை இங்கு நடந்தது
மனிதனை மனிதனே தாழ்த்தும் துயரம் நிகழ்ந்தது
புதுப்புது வழிகளில் தினம்தினம் சிக்கல்கள்
சாதிவெறி மிருகத்தால் விழுகுது பிணங்கள்

சாதியா நம் பண்பாடு
அதில் ஊறிப்போனதடா நம் நாடு
பெற்றார் பல பல பட்டத்தை அட
சிறப்பாய் செய்தார் சட்டத்தை
அறிவை நீ கொஞ்சம் விரிவு செய் நீ
ஒன்றாய் கூடி புரட்சி செய்
சொன்னது யார்?அவர் பெயர் என்ன?அவர் பெயர் தான் டாக்டர் அம்பேத்கர்

அவர்தான் அம்பேத்கர்
அவர் பெயர்தான் அம்பேத்கர்
புத்தனின் புதல்வனாய்
புதுயுக தோழனாய் பூமியில் தோன்றினார்

ஜெய் பீம்,ஜெய் பீம்,ஜெய் பீம்,ஜெய் பீம்
ஜெய் பீம்,ஜெய் பீம்,ஜெய் பீம்,ஜெய் பீம்
ஜெய் பீம்,ஜெய் பீம்,ஜெய் பீம்,ஜெய் பீம்
ஜெய் பீம்,ஜெய் பீம்,ஜெய் பீம்,ஜெய் பீம்

பலியிடுவார்கள் பலியாடுகளைத்தான்
சிங்கங்கள் எப்போதும் சிக்காது மவனே
சிலைகளை நீ இங்கு உடைக்கும் மடமை
படித்துப் பார் தெரியும் அவர் பெருமை

உனக்கும் சேர்த்து போராடினார்
உன் உரிமைக்காக வாதாடினார்
சாதிக் கூண்டில் அடைக்காதே
வரலாற்றுத் தவறைச் செய்யாதே
காவி சாயம் பூசாதே
அவர் எல்லோருக்கும் தலைவர் தானே

சமத்துவம் சமூக நீதியின் மகத்துவம் புரிந்து நீ ஒரு யுத்தம் செய்
சனதான தர்மம் பார்ப்பனிய ஆதிக்கம் திமிரை அழிக்க திட்டம் செய்
என சொல்லி செய்தவர், செய்தும் சொன்னவர் தலைவர் டாக்டர் அம்பேத்கர்
அவர் பெயரைச் சொல்வதில் பெருமையில்லை
கருத்தை அறிந்து களம் செல் நீ

சாதி ஒழித்து ஒரு நாடு படைக்க அவர் ஏட்டை எடுத்து சமர் செய்வோம்
விடுதலை வேட்கை வேண்டுமடா,சுயமரியாதை வாழ்க்கை வேண்டுமடா
காவி இருளும் சூழுதடா நம் இந்திய நாட்டை ஆளுதடா
சாதி சங்கங்கள் சீறுதடா, நாடு சமநிலையற்று மாறுதடா

அம்பேத்கரை நீ படித்துவிடு முழு மனிதனாய் முதலில் மாறிவிடு
உண்மையெல்லாம் நீ உணர்ந்து விடு
இந்த சாதிய கூட்டத்தை கதற விடு
ஜெய்பீம் என்று கோஷமிட்டு சும்மா சனாதன சக்தியை சிதற விடு

அவர்தான் அம்பேத்கர்
அவர் பெயர் தான் அம்பேத்கர்
புத்தனின் புதல்வனாய்
புதுயுக தோழனாய்
பூமியில் தோன்றினார்

ஜெய் பீம்,ஜெய் பீம்,ஜெய் பீம்,ஜெய் பீம்
ஜெய் பீம்,ஜெய் பீம்,ஜெய் பீம்,ஜெய் பீம்
ஜெய் பீம்,ஜெய் பீம்,ஜெய் பீம்,ஜெய் பீம்
ஜெய் பீம்,ஜெய் பீம்,ஜெய் பீம்,ஜெய் பீம்

Hey, He is a fighter
Constitution writer
Fighting for the oppressed people was his only life time job
Be educate and organise and agitate to claim your rights take him as a hope of life
His name is Dr.Ambedkar



Credits
Writer(s): Kutty Dinesh
Lyrics powered by www.musixmatch.com

Link