Oru Chinna Paravai

ஆஆஆஆ-ஆஆஆஆ -ஆஆஆஆ

ஒரு சின்ன பறவை தன் வண்ண சிறகால்
வானத்தை ஜெயித்திட நினைக்கிறதா
என் உள்ள கதவை அவன் மெல்ல திறக்க
சிறு காற்றென காதலும் நுழைகிறதா

தூறி செல்லும் மழையாய்
என் பேரை கொஞ்சம் நனைத்தாய்
தேனூறி கிடந்த நிலத்தில்
சிறு பூவாய் மெல்ல முளைத்தாய்

வாச முல்லையே நீயும் பேசவில்லையே
ஆசை கொண்ட நெஞ்சில் இப்போ
ஓசை இல்லையே

ஒரு சின்ன பறவை தன் வண்ண சிறகால்
வானத்தை ஜெயித்திட நினைக்கிறதா
என் உள்ள கதவை அவன் மெல்ல திறக்க
சிறு காற்றென காதலும் நுழைகிறதா

தனியா நின்னாலும் துணையே நீதானு
நெனச்சு பார்த்தேனே சுகங்களையே
கடவுள் எங்கேனு உலகம் கேட்டாலே
உனை நான் கைகாட்டி தொழுதிடுவேன்

திரையில் வென்றாலும் தரையில் நின்றாலும்
வாழ்கின்ற நிலவே நான் காத்திருப்பேன்
இருட்டே பாக்காத கதிரே உன் கூட
இருக்கும் நாள் மட்டும் சிருச்சிருப்பேன்

ஒரு சின்ன பறவை தன் வண்ண சிறகால்
வானத்தை ஜெயித்திட நினைக்கிறதா
என் உள்ள கதவை அவன் மெல்ல திறக்க
சிறு காற்றென காதலும் நுழைகிறதா

வெயிலே தீண்டாத நெலவா நீ வாழ
உயரிக்குள் உனை நானும் ஒளிச்சு வைப்பேன்
கிழக்கே காட்டாம விளக்கும் ஏத்தாம
இருட்டில் மின்சாரம் எடுக்க வைப்பேன்

மணக்கும் பூ வாசம் அது தான் உன் பாசம்
உதிர்ந்தே போகாமல் காத்திருப்பேன்
கணக்கே இல்லாமல் கொடுக்கும் முத்தத்தில்
பசியே இல்லாம என விரிப்பேன்

ஒரு சின்ன பறவை தன் வண்ண சிறகால்
வானத்தை ஜெயித்திட நினைக்கிறதா
என் உள்ள கதவை அவன் மெல்ல திறக்க
சிறு காற்றென காதலும் நுழைகிறதா

தூறி செல்லும் மழையாய்
என் பேரை கொஞ்சம் நனைத்தாய்
தேனூறி கிடந்த நிலத்தில்
சிறு பூவாய் மெல்ல முளைத்தாய்

வாச முல்லையே நீயும் பேசவில்லையே
ஆசை கொண்ட நெஞ்சில் இப்போ
ஓசை இல்லையே



Credits
Writer(s): N.r. Raghunanthan, Yugabharathi
Lyrics powered by www.musixmatch.com

Link