Engey Needhi (From "Nenjuku Needhi")

எங்கே நீதி காணாம தேம்புதே பூமி
ஒன்ன தாண்டி கையேந்தும் வாழ்க்க ஏன் சாமி
ஏதேதோ தடங்கலே எங்கேயும் எடஞ்சலே
கண்ணீரில் மூழ்கினாலும் காத்திடாமல் பார்ப்பதோ?

எல்லாரும் ஒம்புள்ள கணக்கு புரியாதா?
யார் மேல யார் கீழ ஒனக்கும் தெரியாதா?

நித்தமும் ஒன வேண்டியும் வலி தீரவே இல்ல
எத்தன வக சாங்கியம் செஞ்ச போதுமே நீ வர்ல
தீண்டாம பாக்குற ஆள நீ காவல் காக்காத
காத்தோட நாத்தமா எங்கள நீயும் மாத்தாத

தீக்கூட தீட்டாச்சே
கண் மூடி நிக்காத

எங்கே நீதி காணாம தேம்புதே பூமி
ஒன்ன தாண்டி கையேந்தும் வாழ்க்க ஏன் சாமி
ஏதேதோ தடங்கலே எங்கேயும் எடஞ்சலே
கண்ணீரில் மூழ்கினாலும் காத்திடாமல் பார்ப்பதோ?

கண்ணீரே இல்லாத காலம் பொறக்காதா?
கை மீறும் ஆகாசம் காண கெடைக்காதா?
கண்ணீரே இல்லாத காலம் பொறக்காதா?
கை மீறும் ஆகாசம் காண கெடைக்காதா?



Credits
Writer(s): Yugabharathi, Dhibu Ninan Thomas
Lyrics powered by www.musixmatch.com

Link