Azhaikiradhae

ஏ பார் இளவேனிலே வானிலே வானிலே வானிலே!
நான் அன்பைக் கேட்டேனே நீ காதல் தந்தாயே
என் மனதின் ஆசை கண்டுபிடித்தாயே
நான் பூக்கள் கேட்டேனே நீ பாக்கள் தந்தாயே
என் வானம் எல்லாம் கானம் பூசுகிறாயே
ஓ தரிசனம் கேட்டால் விழிகளின் உள்ளே
பரிசென வருபவனே!
எந்தன் சிறகு சிறகு சிறகு சிறகு ஆனோனே!

ஓ அழைக்கிறதே மனம் அழைக்கிறதே வா!
வரவில்லை எனில் உடல் இளைக்குது தேவா!

ஓ நான் அன்பைக் கேட்டேனே நீ இன்பம் தந்தாயே
என் மனதின் ஆசை கண்டுபிடித்தாயே

விண்ணின் வண்ணமா? மண்ணின் வண்ணமா?
இளமகள் விழியினில் மின்னும் எண்ணமா?
பூவின் வண்ணமா? தீயின் வண்ணமா?
இளமகள் அணிவது உந்தன் வண்ணமா?

தீயில்லாமலே என்னில் உன்னாலே காதல் ஒளி பாயும்
செந்நிற மாயம் பாய்ந்திடும் வேளை நெஞ்சமும் குளிர்காயும்

கோப்பையின் ஓரம் என் இதழ்ச் சாயம் நானும் காண்பேனே
உன் இதழாக அதனை குடிப்பேன் ருசித்தே குடிப்பேனே

செவ்வானம் தூளாக உன் கையில் வாளாக
எனை எடுத்துப் பிடித்துச் சுழற்றிச் சிரிக்க அன்பே வா!

ஓ அழைக்கிறதே மனம் அழைக்கிறதே வா!
வரவில்லை எனில் உடல் இளைக்குது தேவா!

விண்ணின் வண்ணமா? மண்ணின் வண்ணமா?
இளமகள் விழியினில் மின்னும் எண்ணமா?
பூவின் வண்ணமா? தீயின் வண்ணமா?
இளமகள் அணிவது உந்தன் வண்ணமா?



Credits
Writer(s): Shankar Mahadevan, Ehsaan Noorani, Madhan Karky, Loy Mendonsa
Lyrics powered by www.musixmatch.com

Link