Naan Enbathu Neeyallava

லால லால லா
லால லால லாலா
லா லலா லா லலா லா

நான் என்பது நீ அல்லவோ?
தேவ தேவி
இனி நான் என்பது நீ அல்லவோ?
தேவ தேவி
தேவலோகம் வேறு ஏது?
தேவி இங்கு உள்ள போது
வேதம் ஓது

நான் என்பது நீ அல்லவோ?
தேவ தேவா
இனி நான் என்பது நீ அல்லவோ?
தேவ தேவா

ஆஆஆஆ... அஅஅஅஅ
அஅஅஅஅ... ஆஆஆஆ
அஅஅஅஅ அஅஅஅஅ

பாவை உந்தன் கூந்தல் இன்று
போதை வந்து ஏற்றும் போது
பார்த்து பார்த்து ஏங்கும் நெஞ்சில்
வந்திடாத மாற்றம் ஏது?

பார்வை செய்த சோதனை
நாளும் இன்ப வேதனை
காதல் கொண்ட காமனை
கண்டு கொண்டு நீ அணை

கூடினேன் பண்பாடினேன்
என் கோலம் வேறு ஆனேன்
தாவினேன் தள்ளாடினேன்
உன் தாகம் தீர்க்கலானேன்
பாலும் தெளிதேனும்
பறிமாற நேரம் வந்ததே

நான் என்பது நீ அல்லவோ?
தேவ தேவா
இனி நான் என்பது நீ அல்லவோ?
தேவ தேவா
தேவலோகம் வேறு ஏது?
தேவன் இங்கு உள்ள போது
வேதம் ஓது

நான் என்பது நீ அல்லவோ?
தேவ தேவி

ஆசைக் கொண்ட காதல் கண்கள்
பாட வந்த பாடல் என்ன?
ஆடுகின்ற போது நெஞ்சில்
கூடுகின்ற கூடல் என்ன?

நானும் உந்தன் தோளிலே
வாழுகின்ற நாளிது
தோளில் இந்த நாளிலே
ஆடுகின்ற பூவிது

அன்னமே என் ஆசையோ
உன் ஆதி அந்தம் காண
கண்ணிலே உண்டானதே
என் காதல் தேவி நாண

போதும் இது போதும்
இளம் பூவை மேனி தாங்குமா?

நான் என்பது நீ அல்லவோ?
தேவ தேவி
இனி நான் என்பது நீ அல்லவோ?
தேவ தேவா
தேவலோகம் வேறு ஏது?
தேவன் இங்கு உள்ள போது
வேதம் ஓது

நான் என்பது நீ அல்லவோ?
தேவ தேவா
நான் என்பது நீ அல்லவோ?
தேவ தேவி



Credits
Writer(s): Gangai Amaren, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link