Mannipu

இது மன்னிப்பு கேட்கின்ற நேரம்
விழியோரத்திலே பூக்கும் ஈரம்
பல ஆண்டாண்டுகள் சேர்த்த பாரம்
துளி கண்ணீரிலா யாவும் மாறும்?

பொருள் தேடியே
புகழ் தேடியே
நிலையில்லா புன்னகை தேடியே
வதைத்தே சிதைத்தோமா உன்னை?

எமதன்னையாய்
மடி தந்தனை
எமை மார்பில் ஏந்திக்கொண்டனை
மறந்தே பிரிந்தோமா உன்னை?

வனம் தந்தனை
கடல் தந்தனை
உன் வளம் யாவும் பாழ்செய்ததால்...

இது மன்னிப்பு கேட்கின்ற நேரம்
விழியோரத்திலே பூக்கும் ஈரம்
பல ஆண்டாண்டுகள் சேர்த்த பாரம்
துளி கண்ணீரிலா யாவும் மாறும்?

அன்பிலே நம் அன்பிலே
இந்த மண்ணே மாறாதா?
நேற்றுமே ஓர் நாளைதான்
என பின்னே போகாதா?

ஓர் பூவோடு புல்லோடு
பூண்டோடு புழுவோடு
நாமும் ஓர் உயிரென்று
வாழ்ந்தாலென்ன?

மானுடம் எனும் ஆணவம்
அது கொஞ்சம் வீழாதா
அண்டமே பேரண்டமே
வெறும் அன்பால் ஆகாதா?

அவ் வானோடு கல்லோடு
மலையோடு அலையோடு
நாமும் ஓர் பொருளென்று
இருந்தாலென்ன?

இது மன்னிப்பு கேட்கின்ற நேரம்
விழியோரத்திலே பூக்கும் ஈரம்
பல ஆண்டாண்டுகள் சேர்த்த பாரம்
துளி கண்ணீரிலா யாவும் மாறும்?



Credits
Writer(s): Madhan Karky, Ranina Reddy
Lyrics powered by www.musixmatch.com

Link