Mayile Mayile

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
தளிருடல் தொடலாமோ
மயிலே மயிலே... மயிலே மயிலே...
மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
நினைவுகள் மலராதோ
மயிலே மயிலே... மயிலே மயிலே...

தென்றல் தாலாட்ட தென்னை இருக்க
அது தன்னை மறக்க
தென்றல் தாலாட்ட தென்னை இருக்க
அது தன்னை மறக்க
நீ அணைக்க நான் இருக்க
நாள் முழுக்க தேனளக்க
பனிவாய் மலரே பல நாள் நினைவே
வரவா தரவா பெறவா நான் தொடவா

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
நினைவுகள் மலராதோ...
மயிலே மயிலே... மயிலே மயிலே...

மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க
கெட்டி மேளம் முழங்க
மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க
கெட்டி மேளம் முழங்க
பூங்குழலில் தேனருவி
தோளிரண்டும் நான் தழுவி
வரும் நாள் ஒரு நாள் அது தான் திருநாள்
உறவாய் உயிராய் நிழலாய் நான் வருவேன்

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
தளிருடல் தொடலாமோ
மயிலே மயிலே... மயிலே மயிலே...



Credits
Writer(s): Snehan, Johan
Lyrics powered by www.musixmatch.com

Link