Idhu Kaadhal Nenjam

இது காதல் நெஞ்சம்
கவிதை பாடும் நேரம்
அதில் கலந்து கொள்ள
உன்னை தேடும் வேகம்

இது காதல் நெஞ்சம்
கவிதை பாடும் நேரம்
அதில் கலந்து கொள்ள
உன்னை தேடும் வேகம்

மழை மேகம் இன்றி
வந்ததென்ன மின்னலோ
ஒரு தீயைத் தூவும்
தென்றல் என்ன தென்றலோ

இது காதல் நெஞ்சம்
கவிதை பாடும் நேரம்
அதில் கலந்து கொள்ள
உன்னை தேடும் வேகம்

வெள்ளை வெள்ளை மேகம்
வான் வீதி எங்கும் போகும்
அள்ளித் தூவும் பன்னீர்
கண்ணில் இன்பக் கண்ணீர்

மாலை வந்த வேளை
என் மன்னன் தொட்ட தோளை
காற்று வந்து தீண்டும்
காதல் நோயைத் தூண்டும்

காலம் நேரம் இல்லை
இந்தக் காதல் ரொம்பத் தொல்லை
தேவை என்றும் தேவை
எந்தன் தேவன் உந்தன் சேவை

என்னவோ என்னவோ பண்ணுதே நெஞ்சம்
மன்மதன் மந்திரம் சொல்லவா கொஞ்சம்
ஆடை கூட பாரம் ஆனதே

இது காதல் நெஞ்சம்
கவிதை பாடும் நேரம்
அதில் கலந்து கொள்ள
உன்னை தேடும் வேகம்

மழை மேகம் இன்றி
வந்ததென்ன மின்னலோ
ஒரு தீயைத் தூவும்
தென்றல் என்ன தென்றலோ
இது காதல் நெஞ்சம்
கவிதை பாடும் நேரம்

பட்டு வண்ணக் கன்னம்
நீ தொட்டுத் தந்த சின்னம்
மாறவில்லை இன்னும்
பொன்னைப் போல மின்னும்

அள்ளி அள்ளித் தாவி
என் அங்கம் எங்கும் நீவி
என்ன மாயம் செய்தாய்
எந்தன் நெஞ்சைக் கொய்தாய்

பாடப் பாட ராகம்
உனை பார்க்கப் பார்க்க மோகம்
துன்பம் போன்று இன்பம்
அதைத் தேடி ஓடும் நெஞ்சம்
காதலின் வேதனை யாரிடம் சொல்ல
கண்மணி பாவையை தேடி வா மெல்ல
பாடும் பாடல் கேட்கவில்லையா

இது காதல் நெஞ்சம்
கவிதை பாடும் நேரம்
அதில் கலந்து கொள்ள
உன்னை தேடும் வேகம்

மழை மேகம் இன்றி
வந்ததென்ன மின்னலோ
ஒரு தீயைத் தூவும்
தென்றல் என்ன தென்றலோ

இது காதல் நெஞ்சம்
கவிதை பாடும் நேரம்
அதில் கலந்து கொள்ள
உன்னை தேடும் வேகம்



Credits
Writer(s): Ilaiyaraaja, Bichu Thirumala
Lyrics powered by www.musixmatch.com

Link