Thogai Ilamayil

தோகை இளமயில் ஆடிவருகுது வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ
தோகை இளமயில் ஆடிவருகுது வானில் மழை வருமோ

கோலம் போடும் நாணங்கள் காணாத ஜாலம்
இதழ்களிலே பௌர்ணமி வெளிச்சம்
கண்ணில் துள்ளும் தாளங்கள் ஆனந்த மேளம்
இமை பறவை சிறகுகள் அசைக்கும்
விழிகளிலே காதல் விழா நடத்துகிறாள் சாகுந்தலா
அன்னமும் இவளிடம் நடை பழகும்
இவள் நடை அசைவினில் சங்கீதம் உண்டாகும்

தோகை இளமயில் ஆடிவருகுது வானில் மழை வருமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ

பூமி எங்கும் பூந்தோட்டம் நாம் காண வேண்டும்
புது தென்றலோ பூக்களில் வசிக்கும்
ஆகாய மேகங்கள் நீரூற்ற வேண்டும்
அந்த மழையில் மலர்களும் குளிக்கும்
அருவிகளோ ராகம் தரும்
அதில் நனைந்தால் தாகம் வரும்
தேவதை விழியிலே அமுத அலை
கனவுகள் வளர்க்குது கள்ளூறும் உன் பார்வை

தோகை இளமயில் ஆடிவருகுது வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ

Credits
Writer(s): Ilaiyaraaja, Kabilan Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link