Oru Uravu

ஒரு உறவு அழைக்குது
மறு உறவு தடுக்குது
ஒரு உறவு அழைக்குது
மறு உறவு தடுக்குது

இங்கு வாடும் வாடும்
பூந்தோட்டம்
உனைத் தேடும் காதல்
போராட்டம்

ஒரு உறவு அழைக்குது
மறு உறவு தடுக்குது
ஒரு உறவு அழைக்குது
மறு உறவு தடுக்குது
ஆஅ அஆ ஆ
ஓ ஓஹ்ஹோ

காதல் என்னும் பேச்சு
என்ன கதை ஆச்சு
கண் விழித்து நானும்
கண்ட கனவாச்சு
கொடி தான் இங்கே
காற்றில் ஆடும்
துணை தான் எங்கே
வருமோ என்றே

உள் மனது தவிக்கிறதே தவிக்கிறதே
அது துடிக்கிறதே
உன் கனவு வருகிறதே வருகிறதே
துன்பம் தருகிறதே
அடி மானே மானே வாடாதே

தினம் தினம் நான் ஏங்குறேன்
மனம் கலஞ்சும் தாங்குறேன்
தினம் தினம் நான் ஏங்குறேன்
மனம் கலஞ்சும் தாங்குறேன்

வாய் பேசும்
ஊரார் பொய்யாலே
மெய்யான காதல்
நோயாலே

பெற்றெடுத்த அன்பு
வற்றிய நீர் ஊற்று
சுற்றியுள்ள வம்பு கற்றுக் கொண்ட ஒன்று
அன்பே இங்கு துன்பம் ஆகும்
அது தான் மாற நெடு நாள் ஆகும்

வெளியினிலே வேஷங்கள்
இனி ஆகாது ஆகாது
உள்ளத்திலே காயங்கள்
அது போகாது போகாது
அடி மானே மானே வாடாதே

ஒரு உறவு அழைக்குது
மறு உறவு தடுக்குது
ஒரு உறவு அழைக்குது
மறு உறவு தடுக்குது

இங்கு வாடும் வாடும்
பூந்தோட்டம்
உனைத் தேடும் காதல்
போராட்டம்

ஒரு உறவு அழைக்குது
மறு உறவு தடுக்குது
ஒரு உறவு அழைக்குது
மறு உறவு தடுக்குது



Credits
Writer(s): Ilaiyaraaja, Mohamed Methar M
Lyrics powered by www.musixmatch.com

Link