Naadodi Paattukkal

நாடோடி பாட்டுகள் நான் படிப்பேன்
பாட்டாலே நாட்டையும் நான் புடிப்பேன்
நாடோடி பாட்டுகள் நான் படிப்பேன்
பாட்டாலே நாட்டையும் நான் புடிப்பேன்

தமிழ்ப் பண்ணோடு வாழும்
இந்த மண்ணோட வாசம்
அது எம் பாட்டில் வீசும்
இங்கு எந்நாளும் பேசும் பேசும்

நாடோடி பாட்டுகள் நான் படிப்பேன்
பாட்டாலே நாட்டையும் நான் புடிப்பேன்

தென்றலும் வந்து தங்கிடும் வீடு
செந்தமிழ் நாட்டு சந்தனக் காடு
என் பாட்டு அரங்கேறும் இடம் ஆச்சு

தென்றலும் வந்து தங்கிடும் வீடு
செந்தமிழ் நாட்டு சந்தனக் காடு
என் பாட்டு அரங்கேறும் இடம் ஆச்சு

தென்னையத் தொட்டு புன்னையத் தொட்டு
துள்ளுற சிட்டு சொல்லுற மெட்டு
நான் பாட உருவான சுகமாச்சு

நாள் தோறும் பாட்டெடுப்பேன் ஊர் மயங்க
பாட்டாளி நான் எடுத்த பேர் விளங்க
ஏதேதோ ராகம் அது எப்போதோ தோணும்
அட தேனான கானம் நெஞ்சில் தானாக ஊறும்

நாடோடி பாட்டுகள் நான் படிப்பேன்
பாட்டாலே நாட்டையும் நான் புடிப்பேன்

காவடிச் சிந்து ராமணிச் சிந்து
கை வசம் மின்னும் கன்னிகள் உண்டு
ஏராளம் தமிழ்ப் பாட்டு தெரியாதா ஹா

காவடிச் சிந்து ராமணிச் சிந்து
கை வசம் மின்னும் கன்னிகள் உண்டு
ஏராளம் தமிழ்ப் பாட்டு தெரியாதா ஹா

நாட்டுப்புறத்து பாட்டப் படிச்சா
நாடி நரம்பு ஆடிக் குதிக்கும்
நான் பாடக் கேட்டாலே புரியாதா

தாலாட்ட தாயை விட்டா யார் இருக்கா
தாயார்க்கு பாட்டுச் சொல்லி யார் கொடுத்தா
தூளியிலே போட்டு அவ சொன்னாளே பாட்டு
ஆளானேன் நான்தான் அதக் காதார கேட்டு

நாடோடி பாட்டுகள் நான் படிப்பேன்
பாட்டாலே நாட்டையும் நான் புடிப்பேன்
நாடோடி பாட்டுகள் நான் படிப்பேன்
பாட்டாலே நாட்டையும் நான் புடிப்பேன்

தமிழ்ப் பண்ணோடு வாழும்
இந்த மண்ணோட வாசம்
அது எம் பாட்டில் வீசும்
இங்கு எந்நாளும் பேசும் பேசும்

நாடோடி பாட்டுகள் நான் படிப்பேன்
பாட்டாலே நாட்டையும் நான் புடிப்பேன்



Credits
Writer(s): Ilaiyaraaja, Amaren Gangai
Lyrics powered by www.musixmatch.com

Link