Senjanthu

செஞ்சாந்து குழம்பாலே
மயில் தோகை இறகாலே
செங்காந்தள் விரல் மீது தோழி
அழகாக நலுங்கிட்டு
அமர்ந்தாளே இளஞ்சிட்டு
கல்யாண திருகோலம் வாழி

அழகான மணவாளன்
அவன் கூட நெடுங்காலம்
நிழலாக நடை போடும் நீயே
ஆண்டொன்று தவறாமல்
அடிபாரம் குறையாமல்
பல செல்வம் பெற போகும் தாயே

இந்நாளில் வளைகாப்பு
எல்லோர்க்கும் வரவேற்பு
ஏழாச்சு சூல் கொண்ட மாசம்
பொன்னான கை கொண்டு
பொழுதோடு தாலாட்ட
ஒரு பிள்ளை வரப் போகும் நேரம்



Credits
Writer(s): Vaalee, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link