Sontham Vandhadhu

சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
மாசங்கள் போனாலும்
பாசங்கள் போகாது மாமா

சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
சொர்க்கம் வந்தது வந்தது
அதை சொன்னால் என் மனம் துள்ளுது

மாசங்கள் போனாலும்
வருசங்கள் ஆனாலும்
பாசங்கள் போகாது மாமா

சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
சொர்க்கம் வந்தது வந்தது
அதை சொன்னால் என் மனம் துள்ளுது

கண்ணேன்னு சொல்ல வேண்டாம்
கிளியேன்னு கிள்ள வேண்டாம்
கண்ணாலே கொஞ்சம் பொறு போதும்

நீ வாழும் வீட்டுக்குள்ளே
நீ போடும் கோட்டுக்குள்ளே
நீங்காம இந்த பொண்ணு வாழும்

உன்னையே நானே
உசுரா தானே
நினைச்சேன் மாமா
நெசந்தான் ஆமா

நான் வாங்கும் மூச்சிக்காத்து
உன்னாலதான் உன்னாலதான்
ஓயாம உள்ளஞ்சொல்லும்
உன் பேரை தான் உன் பேரை தான்
சொந்தம் பந்தம் நீ

சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
சொர்க்கம் வந்தது வந்தது
அதை சொன்னால் என் மனம் துள்ளுது

பூப்போல தேகம் தொட்டு
சோப்பாலே தேச்சி விட்டு
நீராட்ட நீயும் ஒரு சேய் தான்

வாய்யான்னு உன்னை கொஞ்சி
வாயார உன்ன சொல்லி
சோரூட்ட நானும் ஒரு தாய் தான்

இரவா பகலா
இருப்பேன் துணையா
கண்ணீர் வடிஞ்சா
தடுப்பேன் அணையா

போகாது உன்னை விட்டு
என்னாசை தான் என்னாளும்தான்
போனாலும் மண்ணை விட்டு
பூவோடு தான் பொட்டோடுதான்
வாழ்வோம் மாமா நாம்

சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
சொர்க்கம் வந்தது வந்தது
அதை சொன்னால் என் மனம் துள்ளுது

மாசங்கள் போனாலும்
வருசங்கள் ஆனாலும்
பாசங்கள் போகாது மாமா

சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
சொர்க்கம் வந்தது வந்தது
அதை சொன்னால் என் மனம் துள்ளுது



Credits
Writer(s): Vaalee, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link