Solai Poovil Malai Thendral

சோலைப் பூவில் மாலைத் தென்றல்
பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும்
ஆடும் காலம்

புது நாணம் கொள்ளாமல்
ஒரு வார்த்தை இல்லாமல்
மலர் கண்கள் நாலும் மூடிக் கொள்ளும்
காதல் யோகம்

சோலைப் பூவில் மாலைத் தென்றல்
பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும்
ஆடும் காலம்

சந்தனக் காடு
நானுன் செந்தமிழ் ஏடு
மான் விழி மாது
நீயோ மன்மதன் தூது

மேகத்துக்குள் மின்னல் போலே
நின்றாயே
மின்னல் தேடும் தாழம்பூவாய்
நானும் வந்தேனே

தாகம் தீர்க்கும் தண்ணீர் போலே
நீயும் வந்தாயே
தாவிப் பாயும் மீனைப் போலே
நானும் ஆனேனே

விண்ணில் இல்லா சொர்க்கம் தன்னை
உன்னில் இங்கே கண்டேனே
கள்ளில் இல்லா இன்பம் உந்தன்
சொல்லில் இங்கே கண்டேனே
லலலல லலலல லலலல லலலல லலலல

சோலைப் பூவில் மாலைத் தென்றல்
பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும்
ஆடும் காலம்

சென்னில மேடில்
தண்ணீர் சேர்ந்தது போலே
ஆனது நெஞ்சம்
நீயென் வாழ்க்கையின் சொந்தம்

என்றும் என்றும்
எந்தன் உள்ளம் உன்னோடு
எந்தன் நெஞ்சில் பொங்கும்
அன்பில் நாளும் நீராடு

கங்கை வெள்ளம் வற்றும்போதும்
காதல் வற்றாது
திங்கள் வானில் தேயும்போதும்
சிந்தை தேயாது

மண்ணில் தோன்றும் ஜென்மம் யாவும்
உன்மேல் அன்பு மாறாது
உன்னை அன்றித் தென்றல் கூட
எந்தன் தேகம் தீண்டாது
லலலல லலலல லலலல லலலல லலலல

சோலைப் பூவில் மாலைத் தென்றல்
பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும்
ஆடும் காலம்

புது நாணம் கொள்ளாமல்
ஒரு வார்த்தை இல்லாமல்
மலர் கண்கள் நாலும் மூடிக் கொள்ளும்
காதல் யோகம்

சோலைப் பூவில் மாலைத் தென்றல்
பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும்
ஆடும் காலம்



Credits
Writer(s): Muthulingam, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link