Maname Avan

மனமே அவன் வாழும் கோயில்
இவனே அதில் வாழும் தெய்வம்
பூக்கள் தினம் கொய்து பூஜை பல செய்து
நான்கு மறை ஓதி நாடும் அருள்ஜோதி
அழுதால் தொழுதால் வருவானோ
மனமே அவன் வாழும் கோயில்
சிவனே அதில் வாழும் தெய்வம்
ஆன்மா திருக்கோயில் விளக்காக
அன்பே அதில் காணும் திரியாக
ஆர்வம் நெய்யாக இடுபவன் நான்
அதனால் ஆசைகள் விடுபவன் நான்
கடல்தனில் நதி சேரா நேரமெது
சிவனுடன் சேராத ஜீவனெது
அழுதால் தொழுதால் வருவானோ
மனமே அவன் வாழும் கோயில்
சிவனே அதில் வாழும் தெய்வம்
நானாய் பிறந்தேனா நானறியேன்
நினைத்தால் இறப்பேனா நானறியேன்
குறைகள் குறையாத மேனி இது
நிறைகள் அறியாத நெஞ்சம் இது
மறை பொருள் தனை காண துடிக்கிறதே
இரு விழி கண்ணீரை வடிக்கிறதே
அழுதால் தொழுதால் வருவானோ
மனமே அவன் வாழும் கோயில்
சிவனே அதில் வாழும் தெய்வம்
பூக்கள் தினம் கொய்து பூஜை பல செய்து
நான்கு மறை ஓதி நாடும் அருள்ஜோதி
அழுதால் தொழுதால் வருவானோ
மனமே அவன் வாழும் கோயில்
சிவனே அதில் வாழும் தெய்வம்



Credits
Writer(s): Ilaiyaraaja, Amaren Gangai
Lyrics powered by www.musixmatch.com

Link