Ammammamma

அம்மம்மம்மா பொன்மாலை தென்றல்
ஆடாதோ தேகம் எங்கும் பூப்போலே
அம்மம்மம்மா பொன்மாலை தென்றல்
ஆடாதோ தேகம் எங்கும் பூப்போலே
பாடாத ராகமே காதோரம் கேட்குமே
என் உள்ளம் வானம் ஆனதே ஏனோ?

அம்மம்மம்மா பொன்மாலை தென்றல்
ஆடாதோ தேகம் எங்கும் பூப்போலே

எங்கெங்கும் வண்ணம் கோடி என்றென்றும் காணும் தேடி
பூலோகம் மேலோகம் ஆனதே
பொன் தோகை காட்டும் மயிலும் பூபாளம் பாடும் குயிலும்
சங்கீதத்தால் ஒன்று சேர்ந்ததே
என் உள்ளம் ஆடும்-ம்-ம்-ம்-ஏதேதோ பாடும்-ம்-ம்-ம்
கன்னி பெண் மேனியில் இன்பங்கள் கூடிடும்

என் உள்ளம் வானம் ஆனதே ஏனோ?
அம்மம்மம்மா பொன்மாலை தென்றல்
ஆடாதோ தேகம் எங்கும் பூப்போலே

நீர் ஓடும் ஓடை கண்டு நீராடும் ஆசை கொண்டு
மேகங்கள் பெண் போல ஏங்கியே
பூந்தென்றல் தேரில் ஏறி பொன்மாலை மஞ்சள் பூசி
நாள் தோறும் கை கொண்டு தாங்கியே
ஏதேதோ ஆசை, பேசாதோ பாஷை
எங்கெங்கும் ஓவியம் கண் காணும் காவியம்

என் உள்ளம் வானம் ஆனதே ஏனோ?
அம்மம்மம்மா பொன்மாலை தென்றல்
ஆடாதோ தேகம் எங்கும் பூப்போலே

அம்மம்மம்மா பொன்மாலை தென்றல்
ஆடாதோ தேகம் எங்கும் பூப்போலே
பாடாத ராகமே காதோரம் கேட்குமே
என் உள்ளம் வானம் ஆனதே ஏனோ?

அம்மம்மம்மா பொன்மாலை தென்றல்
ஆடாதோ தேகம் எங்கும் பூப்போலே
அம்மம்மம்மா பொன்மாலை தென்றல்
ஆடாதோ தேகம் எங்கும் பூப்போலே



Credits
Writer(s): Ilaiyaraaja, Gangai Amaren
Lyrics powered by www.musixmatch.com

Link