Vaanathula Velli Ratham

வானத்துல வெள்ளி ரதம்
அது வீதியில வந்ததென்ன
வீதியிலே வந்த ரதம்
ஒரு சேதி இங்கு சொன்னதென்ன

வண்ண ஆடை கட்டி நின்றதென்ன
கண்ணார கண்டதென்ன
கையோடு கொண்டதென்ன

வானத்துல வெள்ளி ரதம்
அது வீதியில வந்ததென்ன
வானத்துல வெள்ளி ரதம்

மரக்கிளையில் காத்தடிக்க
பழம் உதிரும் சோலை இது
பழுத்த பழம் காத்திருக்க
அணில் கடிக்கும் வேளை இது

அணில் போல் உருமாறவா
அடியேன் பசியாறவா
அதற்கோர் தடை போடவா
உடையால் என்னை மூடவா

புதுப் பூவே நான் தொடும் போது
போதை வரக் கூடுமா
பனிச்சாரல் மேல் விழும் போது
ஆசை அலை பாயுமா

நங்கையின் மெல்லிடை
நூல் போல் ஆட
என்னையும் உன்னையும்
இணைத்தேன் நான்

வானத்துல வெள்ளி ரதம்
அது வீதியிலே வந்ததென்ன
வீதியிலே வந்த ரதம்
ஒரு சேதி இங்கு சொன்னதென்ன

வண்ண ஆடை கட்டி நின்றதென்ன
கண்ணார கண்டதென்ன
கையோடு கொண்டதென்ன
வானத்துல வெள்ளி ரதம்
ம்ம் ஹும்

நதியில் எழும் நீரலை போல்
நினைவில் எழும் நாயகி நான்
ராமன் எனும் ராஜனுக்கு
அமைந்து விட்ட ராணியும் நீ

நெடுநாள் உள்ள சொந்தமோ
நிலையாய் வந்த பந்தமோ
பிரிவே இனி இல்லையே
பணிவாய் மடல் முல்லையே

இளம் தோகை தோள்களில் சாய
ஏனோ ஒரு ஏக்கமோ
மலர் மாறன் பூக்களில் போடும்
பாணம் என்னைத் தாக்குமோ
தொட்டதும் பட்டதும் சுகமே தோன்ற
மன்னவன் கைகளில் விழுந்தேன் நான்

வானத்துல வெள்ளி ரதம்
அது வீதியிலே வந்ததென்ன
வீதியிலே வந்த ரதம்
ஒரு சேதி இங்கு சொன்னதென்ன

வண்ண ஆடை கட்டி நின்றதென்ன
கண்ணார கண்டதென்ன
கையோடு கொண்டதென்ன

வானத்துல வெள்ளி ரதம்
அது வீதியில வந்ததென்ன
வானத்துல வெள்ளி ரதம்



Credits
Writer(s): Ilaiyaraaja, Amaren Gangai
Lyrics powered by www.musixmatch.com

Link