Chinna Chinna Roja Poove

சின்ன சின்ன ரோஜா பூவே
செல்லக் கண்ணே நீ யாரு?
தப்பி வந்த சிப்பி முத்தே
உன்னைப் பெற்ற தாய் யாரு?

சொல்லிக் கொள்ள வாயும் இல்லை
அள்ளிக்கொள்ள தாயும் இல்லை
ஏனோ சோதனை?
இளநெஞ்சில் வேதனை

சின்ன சின்ன ரோஜா பூவே
செல்லக் கண்ணே நீ யாரு?

சின்ன பிஞ்சு நெஞ்சுக்குள்ளே
என்ன என்ன ஆசையுண்டோ?
உள்ளம் தன்னை மூடிவைத்த
தெய்வம் வந்தா சொல்லும் இங்கே?

ஊரும் இல்லை பேரும் இல்லை
உண்மை சொல்ல யாரும் இல்லை
நீயும் இனி நானும் ஒரு ஜீவன் தானடா
சோலைக்கிளி போலே என் தோளில் ஆடடா
இது பேசா ஓவியம்
இதில் சோகம் ஆயிரம்

சின்ன சின்ன ரோஜா பூவே
செல்லக் கண்ணே நீ யாரு?
தப்பி வந்த சிப்பி முத்தே
உன்னைப் பெற்ற தாய் யாரு?

கண்ணில் உன்னைக் காணும்போது
எண்ணம் எங்கோ போகுதைய்யா
என்னை விட்டுப் போன பிள்ளை
இங்கே உந்தன் கோலம் கொண்டு

வந்ததென்று எண்ணுகின்றேன்
வாழ்த்து சொல்லி பாடுகின்றேன்
கங்கை நீ என்றால் கரை இங்கு நானடா
வானம் நான் என்றால் விடிவெள்ளி நீயடா
என் வாழ்வில் நிம்மதி அது உந்தன் சன்னதி

சின்ன சின்ன ரோஜா பூவே
செல்லக் கண்ணே நீ யாரு?

சொல்லிக் கொள்ள வாயும் இல்லை
அள்ளிக்கொள்ள தாயும் இல்லை
ஏனோ சோதனை?
இளநெஞ்சில் வேதனை



Credits
Writer(s): Chandra Bose, Vairamuthu Ramasamy Thevar
Lyrics powered by www.musixmatch.com

Link