Abiramiye Annaiye

தனம் தரும் கல்வி தரும்
ஒரு நாளும் தளர்வறியா மனம் தரும்
தெய்வ வடிவும் தரும்
நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும்
நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கணம் தரும் பூங்குழலாள் அபிராமி கடை கண்களே

அபிராமியே அன்னையே அருள் நீயே
மதுராபுரி மகராணியே
அபிராமியே அன்னையே அருள் நீயே
மதுராபுரி மகராணியே

ஆயிரம் கண் நாயகியே
ஆயிரம் கண் நாயகியே
அம்மையே ஆதியே அம்பிகையே

அபிராமியே அன்னையே அருள் நீயே
மதுராபுரி மகராணியே

நீர் நிலம் வானம் காற்றும் கனலும்
படைத்தவளே மெய் பரம்பொருளே
ஆ-ஆ-ஆ-ஆ
நீர் நிலம் வானம் காற்றும் கனலும்
படைத்தவளே மெய் பரம்பொருளே
காவியம் நீ என்றும் காத்திடும் தாய் என்றும்
காவியம் நீ என்றும் காத்திடும் தாய் என்றும்
பாவலர் நாள் தோறும் பண்பாடும்

அபிராமியே அன்னையே அருள் நீயே
மதுராபுரி மகராணியே

ஓம் என வேதம் நான்கும் ஓதும்
உமையவளே நல்வரம் அருளே
ஆ-ஆ-ஆ-ஆ
ஓம் என வேதம் நான்கும் ஓதும்
உமையவளே நல்வரம் அருளே
வான்பிறை எந்நாளும் வார்சடை கொண்டாடும்
வான்பிறை எந்நாளும் வார்சடை கொண்டாடும்
தேவனின் ஸ்ரீ தேவி அம்மா நீ

அபிராமியே அன்னையே அருள் நீயே
மதுராபுரி மகராணியே

ஆயிரம் கண் நாயகியே
அம்மையே ஆதியே அம்பிகையே

அபிராமியே அன்னையே
அபிராமியே அன்னையே அருள் நீயே
மதுராபுரி மகராணியே



Credits
Writer(s): Vaalee, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link