Vaazhkaiye Vazhkai

வாழ்க்கை வாழ்க்கை
மேகம் போலே
மனிதர்கள் எல்லாம்
அதன் துளிப் போலே

இழைந்திட்ட துளிகள்
வேரிடம் விழுமோ?
பிரிந்திட்ட துளிகள்
ஓரிடம் விழுமோ?

இதுதான் காதலா?
இதுதான் காதலா?

மனம் ஏதோ ஒன்று நினைக்க
விதி ஏதோ ஒன்று இனைக்க
என்ன பேர் சொல்லி நான் அழைக்க?

இதுக் காதலா?
இதுவேக் காதலா?
இதுதான் காதலா?
இதுவும் காதலா?

வாழ்க்கை வாழ்க்கை
மேகம் போலே
மனிதர்கள் எல்லாம்
அதன் துளிப் போலே
ஹா... ஹா... ஹா... ஹா

நீயும் வேறு
நானும் வேறு
நினைக்கும் போது
பேதம் நூறு

இருந்தும் நெஞ்சம்
வழிந்ததும் என்ன?
பிரிந்தால் கொஞ்சம்
வலிப்பதும் என்ன?

இதுதான் காதலா?
இதுதான் காதலா?

மனம் எங்கோ எங்கோ, பறக்க?
விதி இங்கே வந்து, இனைக்க
என்ன பேர் சொல்லி நான் அழைக்க?

இதுக் காதலா?
இதுவேக் காதலா?
இதுதான் காதலா?
இதுவும் காதலா?

நீயும் வேறு
நானும் வேறு
நினைக்கும் போது
பேதம் நூறு

ஹா... ஹா... ஹா... ஹா



Credits
Writer(s): Bharadwaj, Vairamuthu Ramasamy Thevar
Lyrics powered by www.musixmatch.com

Link