Ponmaanai Polaadum

பொன்மானை போலாடும் பெண் பாவையே
என்னோடு நீ ஆட வா
தகுதுது ரம்பம் தகுதுது
தகுதுது ரம்பம் தகுதுது

மாமா வா சுகம் சுகம் பூப்போல மணம் வரும்
தேனான இதழ் தரும் ஆனந்தம் இதம் பதம்
தகுதுது ரம்பம் தகுதுது
தகுதுது ரம்பம் தகுதுது

உல்லாச வாலிபன் எனக்கேற்ற காதலன்
பண்பாட வா கொண்டாட வா
எப்போதும் நாயகன் உனக்கேத்த மன்மதன்
கொள்ளையின்பம் இங்கே உண்டு வாம்மா

காணாத பாவங்களை
காண்போமே பாவமில்லை
காணாத பாவங்களை
காண்போமே பாவமில்லை

கன்னங்களோ தேன் கிண்ணங்கள்
மேனியெங்கும் பொன் வண்ணங்கள்
தகுததா தாளம் புரிந்ததா
தகுதுது தகுதுது தகுதுது ரம்பம்

பொன்மானை போலாடும் பெண் பாவையே
என்னோடு நீ ஆட வா வா வா
தகுதுது ரம்பம் தகுதுது
தகுதுது ரம்பம் தகுதுது

முன்னாலே மோகினி மோகத்தில் மாங்கனி
கொஞ்சும் சுகம் கண்டேனம்மா
ஒரு வட்டம் போடு நீ அதில் வந்து ஆடு நீ
உள்ளூரவே கள்ளூறுதே

முத்தாடும் செம்மாதுளை
விளையாடும் என் மார்பிலே
முத்தாடும் செம்மாதுளை
விளையாடும் என் மார்பிலே

என்னென்னவோ உன் லீலைகள்
உன்னிடம்தான் என் ஆசைகள்
அருகில் வா என்னை அணைக்கவா
தகுதுது தகுதுது தகுதுது ரம்பம்

பொன்மானை போலாடும் பெண் பாவையே
என்னோடு நீ ஆட வா ஹேய் வா
தகுதுது ரம்பம் தகுதுது
தகுதுது ரம்பம் தகுதுது

மாமா வா சுகம் சுகம் பூப்போல மணம் வரும்
தேனான இதழ் தரும் ஆனந்தம் இதம் பதம்
தகுதுது ரம்பம் தகுதுது
தகுதுது ரம்பம் தகுதுது



Credits
Writer(s): Ilaiyaraaja, Panchu Arunachalam
Lyrics powered by www.musixmatch.com

Link