Ila Manathil Ezhum Kanavil

இள மனதினில் எழும் கனவினில் விழி மலர்கிறதே (ம்-ம்)
இள மனதினில் எழும் கனவினில் விழி மலர்கிறதே
இளமை அது தரும் இனிமை
இளமை அது தரும் இனிமை
இசை மழையினில் தினமும் நனைவோம் மகிழ்ந்து
இள மனதினில் எழும் கனவினில் விழி மலர்கிறதே

(தரிகிட-தாம்-தரிகிட-தீம்-தரிகிட-ஜம்-தரிகிட-நம்)
(தரிகிட-தாம்-தரிகிட-தீம்-தரிகிட-தம்-தரிகிட-நம்)
ஆ-(தகிட-தகதிமி-தக)
ஆ-(தகிட-தகதிமி-தக)
ஆ-(தகிட-தோம்-தகிட-தை)
(தகிட-தகதிமி-தக்க-தா)

(தந-நந-நந-தந-நந-நந-தந-நந-நந-நா)
(தந-நந-நந-தந-நந-நந-தந-நந-நந-நா)

கருங்குழல் அலை கருவிழி வலை எனை கவர்கிறதே
அருந்தமிழ் கலை அழகிய சிலை ஒளி தருகிறதே
(தந-நந-நந-நா, தந-நந-நந-நா)
இளம் கனவுகளே வலம் வருகிறதே

மையல் எனும் கனல் தனில் என் மனம் உருகுது
தையல் இவள் எழில் தனை என் மனம் தழுவுது
தென்பாங்கு காற்றும் தேவார பாட்டும்
தேவன் கோயில் காதல் தீபம் ஆகும்

இள மனதினில் எழும் கனவினில் விழி மலர்கிறதே
இள மனதினில் எழும் கனவினில் விழி மலர்கிறதே

(தந-நந-நந-தந-நந-நந-தந-நந-நந-நா)
(தந-நந-நந-தந-நந-நந-தந-நந-நந-நா)

புதுமலர் உடல் மணம் தரும் மடல் உனை மயக்கியதோ
தினம் ஒருமுறை கதை படித்திட மனம் அழைக்கிறதோ
(தந-நந-நந-நா, தந-நந-நந-நா)
கரம் துடிக்கிறதே உடல் கொதிக்கிறதே

கன்னம் எனும் பழம் தனை உன் உதடுகள் தொடும்
அன்னம் எனும் இவள் இடை உன் கரங்களில் விழும்
நீராடும் கங்கை நீ தெய்வ மங்கை
காமன் மீட்டும் காதல் வீணை நீயே

இள மனதினில் எழும் கனவினில் விழி மலர்கிறதே
இள மனதினில் எழும் கனவினில் விழி மலர்கிறதே

(ஆ-அ)
(ஆ-அ)
(ஆ-அ)
(ஆ-அ)
(ஆ-ஆ-ஆ-ஆ)

நதி வருவதும் அலை எழுவதும் கடல் தனில் விழவே
இவள் மலர்ந்ததும் எழில் வளர்ந்ததும் இளையவன் தொடவே
நதி வருவதும் அலை எழுவதும் கடல் தனில் விழவே
இவள் மலர்ந்ததும் எழில் வளர்ந்ததும் இளையவன் தொடவே

முக தரிசனமே கலை விமர்சனமே
முக தரிசனமே கலை விமர்சனமே
நித்தம் மனம் சுகம் பெறும் உன் புது உறவினில்
முத்தம் தினம் சுவை தரும் உன் கனி இதழ்களில்
தேனூறும் முல்லை நான் உந்தன் கிள்ளை
மேகம் தேடும் வானம் நீயே வாராய்

இள மனதினில் எழும் கனவினில் விழி மலர்கிறதே
(தந-நந-நந-தந-நந-நந-தந-நந-நந-நா)
இளமை அது தரும் இனிமை
இளமை அது தரும் இனிமை
இசை மழையினில் தினமும் நனைவோம் மகிழ்ந்து
இள மனதினில் எழும் கனவினில் விழி மலர்கிறதே

(தந-நந-நந-தந-நந-நந-தந-நந-நந-நா)

Credits
Writer(s): Ilaiyaraaja, Pirai Soodan
Lyrics powered by www.musixmatch.com

Link