Nizhalai Nanum Thodarave

ஒரு வார்த்தை பேசு என் கண்ணே
நீ என்னை நீங்கிச் செல்லாதே

ஒரு வார்த்தை பேசு என் கண்ணே
நீ என்னை நீங்கிச் செல்லாதே

நிழலாய் நானும் தொடரவே
கனவாய் நீயும் கலைகிறாய்
வலிகள் தாங்கிடும் நெஞ்சம்
உன் பிரிவை தாங்கக் கூடுமோ

நிழலாய் நானும் தொடரவே
கனவாய் நீயும் கலைகிறாய்
உயிரைப் பிரிகின்ற வலியினை
என் இதயம் இன்று உணருதே

மேகங்கள் இல்லாமல்
தீருமா தாகம்
ராகங்கள் இல்லாமல்
சேருமா தாளம்

நீயின்றி எந்நாளும்
மாறுமா காயம்
நீதானே என்வாழ்வின்
பௌர்ணமி காலம்

சாரல்கள் வராமலே
சோலைகள் மலராதே
கோபங்கள் தீராமல்
கூடல்கள் ஆகாதே
காயங்கள் ஆறாதோ
கண்ணே நம் மனம் பேச

வார்த்தை இல்லா அடி
மொழியே இல்லை
தர்க்கம் இல்லா
ஓர் இணையும் இல்லை

நேற்று வரை
உன் உயிராய் நானே
இன்று ஏனோ
உன் பாரமாய் ஆனேன்

விடியலை கானா வானமும்
இங்கு இருந்திட இருந்திட நியாயமோ
கரைதனை தீண்டா அலைகளும்
இங்கு இருந்திட இருந்திட கூடுமோ

இமைகளை மூடிடும் நொடியிலும்
உனை பிரிந்திட பிரிந்திட கூடுமோ
கனவுகள் ஆயிரம் கண்டதும்
அது கலைந்திட நெஞ்சமும் தாங்குமோ

ஒரு வார்த்தை பேசு என் கண்ணே

உனை விட்டு நானும் போவேனோ
நீதானே இன்றும் என் உயிரே
நீயின்றி நானும் வாழ்வேனோ



Credits
Writer(s): Ananthi Rn, Ananthi Amma
Lyrics powered by www.musixmatch.com

Link