Chinna Poo

சின்னப்பூ சின்னப்பூ
கண்ணெல்லாம் வண்ணப்பூ
அம்மம்மா அம்மம்மா
என்னைப்போல் கன்னிப்பூ

இளவேனில் காலம்
இளமாலை நேரம்
இன்பத்தை அள்ளி இறைக்கும்
சொர்க்கத்தின் அந்தப்புரம் இதுவோ

சின்னப்பூ சின்னப்பூ
கண்ணெல்லாம் வண்ணப்பூ
அம்மம்மா அம்மம்மா
என்னைப்போல் கன்னிப்பூ

பூவெல்லாம்
மெளன பாஷைகள் பேச
நான் என்ன சொல்ல ஹோ
நாளெல்லாம்
அந்தி நேரத்தில் எந்தன்
நெஞ்சத்தைக் கிள்ள ஹோ

ஏதோ ஏதேதோ எண்ணம் கூட
உள்ளம் என் உள்ளம் ஊஞ்சல் ஆட
கோடை நாட்களில்
காமன் பண்டிகை
காற்றும் பூவும்தான்
காதல் பாட்டுப் பாடும்
வசந்த விழா

சின்னப்பூ சின்னப்பூ
கண்ணெல்லாம் வண்ணப்பூ
அம்மம்மா அம்மம்மா
என்னைப்போல் கன்னிப்பூ

லுலுலு லுலுலூலூ லுலுலூலுலுலூ
லுலுலு லுலுலூலூ லுலுலூலுலுலூ
லுலுலு லுலூலூ லுலுலு லுலூலூ
லுலுலு லுலூலூ லுலுலு லுலூலூ

மேகங்கள்
புத்தன் கோயில்கள் தேடி
ஊர்கோலம் செல்ல ஹோ
ராகங்கள்
கட்சிக் கூட்டங்கள் பாடி
வாழ்த்துக்கள் சொல்ல ஹோ

இன்பம் கொண்டாடும் மக்கள் இங்கே
மண்ணில் உண்டான சொர்க்கம் இங்கே
நூறு நாடுகள் வாழும் மாந்தர்கள்
கூடும் நாளிலே
நேசம் பாசம்
யாவும் விளைந்திடுமோ

சின்னப்பூ சின்னப்பூ
கண்ணெல்லாம் வண்ணப்பூ
அம்மம்மா அம்மம்மா
என்னைப்போல் கன்னிப்பூ

நூலாடைத்
தொட்டுப் போராடும் காற்றே
நீ கொஞ்சம் இங்கே நில்
நான் கூட
வண்ணப்பூ மாலை சூடும்
நாள் எந்த நாளோ சொல்

சின்னப்பெண் தேடும் மன்னன் யாரோ
கன்னிப் பூச்சூடும் கண்ணன் யாரோ
நீலத்தாமரை
நீரைத்தேடுது
பூவைப்போலவே
பூவை நானும்
வாடும் பருவமிது

சின்னப்பூ சின்னப்பூ
கண்ணெல்லாம் வண்ணப்பூ
அம்மம்மா அம்மம்மா
என்னைப்போல் கன்னிப்பூ

இளவேனில் காலம் இளமாலை நேரம்
இன்பத்தை அள்ளி இறைக்கும்
சொர்க்கத்தின் அந்தப்புரம் இதுவோ

சின்னப்பூ சின்னப்பூ
கண்ணெல்லாம் வண்ணப்பூ
அம்மம்மா அம்மம்மா
என்னைப்போல் கன்னிப்பூ



Credits
Writer(s): Ilaiyaraaja, Vaali
Lyrics powered by www.musixmatch.com

Link