Kadhal Un Leelaya

லாலாலா லாலாலா லாலா
லா லா லா லால
லாலாலா லாலாலா லாலா
லா லா லா லால

காதல் உன் லீலையா
இளங்காமன் உன் வேலையா
உள்ளுக்குள்ளே கல்லூறுதே
தங்கக் கிண்ணம் தள்ளாடுதே
முத்தம் என்னும் யுத்தம் செய்யும்
இந்தக் காதல் உன் லீலையா
காமன் உன் வேலையா

வெள்ளை நிலா வானில் வந்தால்
வீதி எல்லாம் பொன்னாகும்
கண்ணுக்குள்ளே காதல் வைத்தாய்
கந்தல் மனம் என்னாகும்

ஆதாமிடம் ஏவாளும்
அள்ளித் தந்தாள் எந்நாளும்
இன்னும் மிச்சம் ஏராளம்
எங்கே உந்தன் தாராளம்
கண்கள் ரெண்டும் காமன் குளம்

இந்தக்காதல் உன் லீலையா
இளங்காமன் உன் வேலையா

Japan என்னும் தேசத்திலே
பகல் பொழுதும் ராத்திரிதான்
போதை இவள் கூட வந்தால்
கோப்பைக்குள்ளே யாத்திரைதான்

வெட்கம் இன்று தீராதா
முத்தம் சுதி சேராதா
அச்சம் என்னும் கடல் தாண்டி
பெண்மை கரை ஏறாதா
முன்னும் பின்னும் இல்லாததா

அடக்காதல் உன் லீலையா
இளங்காமன் உன் வேலையா
உள்ளுக்குள்ளே கல்லூறுதே
தங்கக் கிண்ணம் தள்ளாடுதே
முத்தம் என்னும் யுத்தம் செய்யும்
இந்தக் காதல் உன் லீலையா
காமன் உன் வேலையா



Credits
Writer(s): Ilaiyaraaja, Kabilan Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link