Udaiyatha Vennila

உடையாத வெண்ணிலா
உறங்காத பூங்குயில்
நனைகின்ற புல்வெலி
நனையாத பூவனம்

உதிர்கின்ற ஒருமுடி
கலைகின்ற சிறு நகம்
ஸ்ருங்கார சீண்டல்கள்
சில்லென்ற ஊடல்கள்

பிரியம் பிரியம்
ஆ பிரியம் பிரியம்
ஆ பிரியம் பிரியம்
ஆ பிரியம் பிரியம்

உடையாத வெண்ணிலா
உறங்காத பூங்குயில்
நனைகின்ற புல்வெலி
நனையாத பூவனம்

அந்தி மஞ்சள் மாலை
ஆளில்லாத சாலை
தலைக்கு மேலே போகும்
சாயங்கால மேகம்

முத்தம் வைத்த பின்னும்
காய்ந்திடாத ஈரம்
எச்சில் வைத்த பின்னும்
மிச்சமுள்ள பானம்
கன்னம் என்னும் பூவில்
காய்கள் செய்த காயம்

பிரியம் பிரியம்
பிரியம் பிரியம்
பிரியம் பிரியம்
பிரியம் பிரியம்

உடையாத வெண்ணிலா
உறங்காத பூங்குயில்
நனைகின்ற புல்வெலி
நனையாத பூவனம்

கண்கள் செய்யும் ஜாடை
கழுத்தில் பூத்த வேர்வை
அள்ளிச்செல்லும் கூந்தல்
ஆடை தூக்கும் காற்று

மொட்டு விட்ட பாகம்
தொட்டு பார்த்த சினேகம்
முகத்தின் மீது ஆடை
மோதிச்சென்ற மோகம்
இரண்டு பேரை ஒன்றாய்
எழுதிப்பார்க்கும் இன்பம்

பிரியம் பிரியம்
பிரியம் பிரியம்
பிரியம் பிரியம்
பிரியம் பிரியம்

உடையாத வெண்ணிலா
உறங்காத பூங்குயில்
நனைகின்ற புல்வெலி
நனையாத பூவனம்

உதிர்கின்ற ஒருமுடி
கலைகின்ற சிறு நகம்
ஸ்ருங்கார சீண்டல்கள்
சில்லென்ற ஊடல்கள்

பிரியம் பிரியம்
பிரியம் பிரியம்
ஆ பிரியம் பிரியம்
பிரியம் பிரியம்



Credits
Writer(s): Vidyasagar, Vairamuthu Ramasamy Thevar
Lyrics powered by www.musixmatch.com

Link