Ennarugae Neeyirundhal

என்னருகே நீ இருந்தால்
இயற்கை எல்லாம் சுழலுவதேன்
உன்னருகே நான் இருந்தால்
உலகமெல்லாம் ஆடுவதேன்
என்னருகே நீ இருந்தால்
இயற்கை எல்லாம் சுழலுவதேன்
உன்னருகே நான் இருந்தால்
உலகமெல்லாம் ஆடுவதேன்
கை அணைந்த வேளையிலே
கண்ணிரண்டும் மயங்குவதேன்
கை அணைந்த வேளையிலே
கண்ணிரண்டும் மயங்குவதேன்
மின்சாரம் பாய்ந்தது போல்
மேனி எல்லாம் நடுங்குவதேன்
மின்சாரம் பாய்ந்தது போல்
மேனி எல்லாம் நடுங்குவதேன்
என்னருகே நீ இருந்தால்
இயற்கை எல்லாம் சுழலுவதேன்
உன்னருகே நான் இருந்தால்
உலகமெல்லாம் ஆடுவதேன்
வஞ்சி இடை கெஞ்சுவதேன்
பிஞ்சு மொழி கொஞ்சுவதேன்
வஞ்சி இடை கெஞ்சுவதேன்
பிஞ்சு மொழி கொஞ்சுவதேன்
கெஞ்சுவதும் கொஞ்சுவதும்
வஞ்சியரின் சீதனமே
கெஞ்சுவதும் கொஞ்சுவதும்
வஞ்சியரின் சீதனமே
என்னருகே நீ இருந்தால்
இயற்கை எல்லாம் சுழலுவதேன்
உன்னருகே நான் இருந்தால்
உலகமெல்லாம் ஆடுவதேன்
இளமையிலே காதல் வரும்
எது வரையில் கூட வரும்
இளமையிலே காதல் வரும்
எது வரையில் கூட வரும்
முழுமை பெற்ற காதல் எல்லாம்
முதுமை வரை ஓடி வரும்
முழுமை பெற்ற காதல் எல்லாம்
முதுமை வரை ஓடி வரும்
என்னருகே நீ இருந்தால்
இயற்கை எல்லாம் சுழலுவதேன்
உன்னருகே நான் இருந்தால்
உலகமெல்லாம் ஆடுவதேன்



Credits
Writer(s): Kannadhasan, S. M. Subbiah Naidu
Lyrics powered by www.musixmatch.com

Link