Saamiya Ventikkittu

சாமிய வேண்டிக்கிட்டு நம்ம சங்கதி கேளு புள்ள
சாதகம் பாத்துப்புட்டேன் இப்ப சம்மதம் சொல்லு புள்ள

தாலிய கட்ட சம்மதமா மேளத்தை கொட்ட சொல்லட்டுமா
வெக்கமும் என்ன வள்ளியம்மா
வச்சுப்புட்டேன் ஒரு புள்ளியம்மா
என்னடி யம்மா, பதில் சொல்லடி சும்மா
என்னடி யம்மா பதில் சொல்லடி சும்மா

சாமிய வேண்டிக்கிட்டு நம்ம சங்கதி கேட்டுபுட்டேன்
சாதகம் பாத்துப்புட்டேன் இப்ப சம்மதம் சொல்லிபுட்டேன்

ஹேய் (ஹேய்)
ஹேய் (ஹேய்)

தாலிய முடிக்காம சேலைய தொடலாமா
மாலையும் கொடுக்காம சரி படுமா
தென்னக மன்னா புரிஞ்சது சங்கதி என்ன
அழகு பூவிருந்தா தேனி தொடராதா
அமுதம் குடிச்சாக்கா அலையும் தெரியாதா

கொழுப்பு உனக்கே தான் இனிமே குறையாதா
மறுப்பு சொன்னாக்கா மதிப்பு தெரியாதா
அந்த கதை தான் என்னத்துக்கு
அர்ச்சனை வைப்பேன் கன்னத்துக்கு
காவலுக்கிங்கே ஆள் இருக்கு, விட்டிரு மச்சான்

ஏய் என்னடி யம்மா பதில் சொல்லடி சும்மா
சுத்துற மச்சான் சொக்கு பொடிய வைச்சான்

சாமிய வேண்டிக்கிட்டு நம்ம சங்கதி கேளு புள்ள
சாதகம் பாத்துப்புட்டேன் இப்ப சம்மதம் சொல்லு புள்ள ஹேய்

ஹேய்
ஹேய்-ஹேய்
தந்தானன-தந்தன-தந்தன-தந்தனனா-தந்தனனா
தந்தானன-தந்தன-தந்தன-தந்தனனா

ஹேய் (ஏ-ஏ-ஏ-ஏ)
ஹேய் (ஏ-ஏ-ஏ-ஏ)
ஹேய்

மாம்பழம் பழுத்தாலே வாசனை வரும் பாரு
மல்லிகை பூ தாரேன் என்னை பாரு
என்னடி யம்மா ஒரு பதில் சொல்லடி சும்மா
பொண்ணே பூ தானே எதுக்கு உன் பூவு
மாமன் புடிச்சாலே எனக்கு புது நோவு

எதுக்கு தகராறு மனசும் மாறாதா
ஏண்டி அடி புள்ள அணைச்சா போதாதா
தாலிய கட்டு அற்புதமா சம்மதம் தாரேன் அப்புறமா
தைய்யில நல்ல நாளிருக்கு சம்மதம் சொல்லு

என்னை சுத்துற மச்சான் சொக்கு பொடிய வைச்சான்
அடி என்னடி யம்மா பதில் சொல்லடி சும்மா

சாமிய வேண்டிக்கிட்டு நம்ம சங்கதி கேட்டுபுட்டேன் (ஆன்)
சாதகம் பாத்துப்புட்டேன்
இப்ப சம்மதம் சொல்லிபுட்டேன் (ஐய்யோ)

தாலிய கட்ட சம்மதம் தான் (ம்)
மேளத்தை கொட்ட சொல்லு மச்சான் (ஆ-ஹான்)
வெக்கமும் இப்போ கக்கத்தில
மத்தது எல்லாம் சொர்க்கத்தில

என்னடி யம்மா பதில் சொல்லடி சும்மா
சுத்துற மச்சான் சொக்கு பொடிய வைச்சான்

கும்தள-கும்மா-கும்ம-கும்ம
கும்தள-கும்மா
ஏய்-கும்தள-கும்மா-கும்ம-கும்ம
கும்தள-கும்மா
கும்மா-கும்மா-கும்



Credits
Writer(s): Gangai Amaren, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link