Ezhugavae

எழுகவே
படைகள் எழுகவே

எழுகவே படைகள் எழுகவே
விடியவே இரவு விடியவே
ஆட்டம் போட்ட கூட்டம் இங்கு ஆட்டம் காண போகுது
கேள்வி கேட்டு வேள்வி செய்ய வேளை வந்தது

(ஆட்டம் போட்ட கூட்டம் இங்கு ஆட்டம் காண போகுது)
(கேள்வி கேட்டு வேள்வி செய்ய வேளை வந்தது)
(எழுகவே படைகள் எழுகவே)
(விடியவே இரவு விடியவே)

மூச்சு வாங்க உழைத்தீர்கள் முடிவென்ன ஆச்சு
குனிந்து குனிந்து நடந்தீர்கள் கூன் விழுந்தாச்சு
நெசவு செய்து கொடுத்தீர்கள் அடிமைகள் போலே
உடுத்தி கொள்ள உடையில்லை இடுப்புக்கு மேலே

அடுப்பு உண்டு பூனைக்கு அதுவும் இல்லை ஏழைக்கு
(அடுப்பு உண்டு பூனைக்கு அதுவும் இல்லை ஏழைக்கு)
உழைக்கும் மக்களே ஒன்று கூடுங்கள்
வேளை வந்தது கேள்வி கேளுங்கள்
உழைக்க ஒருவன் பிழைக்க ஒருவன்
என்ற விதியை கொளுத்துங்கள்

(ஆ-ஆ-ஆ-எழுகவே படைகள் எழுகவே)
(விடியவே இரவு விடியவே)
ஆட்டம் போட்ட கூட்டம் இங்கு ஆட்டம் காண போகுது
கேள்வி கேட்டு வேள்வி செய்ய வேளை வந்தது
(எழுகவே படைகள் எழுகவே)
(விடியவே இரவு விடியவே)

ஜாதி பேத வேதாந்தம் இனி இங்கு இல்லை
உறங்கி வாழும் ராஜாங்கம் நிரந்தரம் இல்லை
உனக்கும் எனக்கும் போராட ஒருத்தரும் இல்லை
சார்ந்து வாழும் வாழ்க்கை போல் சாபங்கள் இல்லை

பழைய விலங்கை உடைக்கிறேன்
புதிய உலகம் படைக்கிறேன்
(பழைய விலங்கை உடைக்கிறேன்)
(புதிய உலகம் படைக்கிறேன்)

வேட்டையாடவே சாட்டை வாங்குவேன்
தாழ்வு நீங்கவே தலைமை தாங்குவேன்
சிதறி கிடக்கும் நெருப்பை சேர்த்து
பழைய இருட்டை கொளுத்துவேன்

(ஆ-ஆ-ஆ)

எழுகவே படைகள் எழுகவே
விடியவே இரவு விடியவே
ஆட்டம் போட்ட கூட்டம் இங்கு ஆட்டம் காண போகுது
கேள்வி கேட்டு வேள்வி செய்ய வேளை வந்தது

(ஆட்டம் போட்ட கூட்டம் இங்கு ஆட்டம் காண போகுது)
(கேள்வி கேட்டு வேள்வி செய்ய வேளை வந்தது)
(எழுகவே படைகள் எழுகவே)
(விடியவே இரவு விடியவே)
(எழுகவே படைகள் எழுகவே)
(விடியவே இரவு விடியவே)



Credits
Writer(s): Ilaiyaraaja, Kabilan Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link