Salangai

சலங்கையில் ஒரு சங்கீதம்
உலகெல்லாம் அதன் ஓம்காரம்
கலை ராஜன் இங்கே பதம் பாட
கலைவாணி இங்கே நடமாட
விண்ணும் மண்ணுமே ஒன்று கூடுமே
ஈசா பரமேசா பெண் பூவை நீ வாழ்த்த வா

நடராஜன் குடி கொண்ட கலை அல்லவா
ஆ! நடராஜன் குடி கொண்ட கலை அல்லவா
உயிரோடு கருவாகி உடலோடு உருவாகி
உயிரோடு கருவாகி உடலோடு உருவாகி
வாழும் ஒரே கலை தானல்லவா

நடராஜன் குடி கொண்ட கலை அல்லவா
ஆ! நடராஜன் குடி கொண்ட கலை அல்லவா

தக்க திமி தாம்
கிட்ட தக்க தாம்
தக்கதஜம் திமிதஜம் ஜனதஜம்
தரிகிட்ட தக்கதாம்

புலித் தோலில் உடை கொண்டு பொலிகிற தேகம்
அது எங்கள் உமையாளின் பாகம்
புலித் தோலில் உடை கொண்டு பொலிகிற தேகம்
அது எங்கள் உமையாளின் பாகம்
பாம்போடு வாழ்கின்ற பரமேஸ்வரா
பதில் என்ன கங்காதரா ஆ ஆ ஆ
பாம்போடு வாழ்கின்ற பரமேஸ்வரா
பதில் என்ன கங்காதரா ஆ ஆ ஆ

மலைகள் இடிய மழையும் பொழிய
கடலும் வழிய திசைகள் கிழிய
வலமும் நீ வரும் தினம் தினம் தொழுதிட
ததீங்கிணதோம் ததீங்கிணதோம் ததீங்கிணதோம்

நடராஜன் குடி கொண்ட கலை அல்லவா
ஆ! நடராஜன் குடி கொண்ட கலை அல்லவா
உயிரோடு கருவாகி உடலோடு உருவாகி
உயிரோடு கருவாகி உடலோடு உருவாகி
வாழும் ஒரே கலை தானல்லவா

நடராஜன் குடி கொண்ட கலை அல்லவா
ஆ! நடராஜன் குடி கொண்ட கலை அல்லவா

தகதிமி தகஜணு தக்க ஜணு
தகிட தம் தம்
பகைவரை ஒழித்திடும் வலிமை வேண்டும்
ஜணுதக திமி தக கிடத தீம் தீம்
உலகினில் கொடுமைகள் ஒழிய வேண்டும்

தகிட தம் தம்
உனது வடிவம்
ஜணுத தம் தம்
நெருப்பின் வடிவம்
தகிட தீம் இரு கரம்
தகிட தீம் பயங்கரம்
தகிட தீம் இரு கரம்
தகிட தீம் பயங்கரம்
தகிட தீம் இரு கரம் தகிட தீம் பயங்கரம்
அண்ட சராசரம் ஆகிய எங்கும்
நின்று நிலைப்பது சக்தியின் சந்தம்

கணகண கணகண கணகண கணகண
யகண தம்
தணதண தணதண தணதண
தணதண தகண ஜம்
தணகண தணகண பகண ஜம்
தணகண பணகண ரகண ஜம்
ஜகண மகணம் ஜகண ககணம்
ஜகண பகணம் ரகண ஜகணம்
ஜகமக ஜககண தகபக ரகஜண
யகண மகண ஜகண ககண பகணக ஜம்

நடராஜ நந்தினி பரமேசன் பத்தினி
நடராஜ நந்தினி பரமேசன் பத்தினி
குலம் காக்கும் சித்தினி குறையாத சக்தி நீ
குலம் காக்கும் சித்தினி குறையாத சக்தி நீ
அகிலாண்ட தேவி நீ அணையாத ஜோதி நீ
அகிலாண்ட தேவி நீ அணையாத ஜோதி நீ
அறியாத பெண்களை காக்கட்டும் உன் சக்தி
மகிஷ ராஷஷ மர்த்தினி எரியட்டுமே அக்கினி
மகிஷ ராஷஷ மர்த்தினி



Credits
Writer(s): Ilaiyaraaja, Kabilan Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link