Aagaya Vennilavae

ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளை தானோ

ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளை தானோ

மலர்சூடும் கூந்தலே
மழைக்கால மேகமாய் கூட
உறவாடும் விழிகளே இரு
வெள்ளி மீன்களாய் ஆட

ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளை தானோ

தேவார சந்தம் கொண்டு
தினம்பாடும் தென்றல் ஒன்று
பூவாரம் சூடிக்கொண்டு
தலைவாசல் வந்ததின்று

தென் பாண்டி மன்னன் என்று
திருமேனி வண்ணம் கண்டு
மடியேறி வாழும் பெண்மை
படியேறி வந்ததின்று

இளநீரும் பாலும் தேனும்
இதழோரம் வாங்க வேண்டும்
கொடுத்தாலும் காதல் தாபம்
குறையாமல் ஏங்க வேண்டும்

கடல் போன்ற ஆசையில்
மடல் வாழை மேனி தான் ஆட
நடு ஜாம வேளையில்
நெடு நேரம் நெஞ்சமே கூட

ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளை தானோ

மலர்சூடும் கூந்தலே
மழைக்கால மேகமாய் கூட
உறவாடும் விழிகளே இரு
வெள்ளி மீன்களாய் ஆட

ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளை தானோ

தேவாதி தேவர் கூட்டம்
துதி பாடும் தெய்வ ரூபம்
பாதாதி கேசமெங்கும்
ஒளி வீசும் கோவில் தீபம்

வாடாத பாரிஜாதம்
நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு கானம்
கிளி பேச்சை கேட்கக் கூடும்

அடியாளின் ஜீவன் மேனி
அதிகாரம் செய்வதென்ன
அலங்கார தேவ தேவி
அவதாரம் செய்ததென்ன

இசை வீணை வாடுதோ
இதமான கைகளில் மீட்ட
ஸ்ருதியோடு சேருமோ
சுகமான ராகமே காட்ட

ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளை தானோ

மலர்சூடும் கூந்தலே
மழைக்கால மேகமாய் கூட
உறவாடும் விழிகளே இரு
வெள்ளி மீன்களாய் ஆட

ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளை தானோ



Credits
Writer(s): Vaalee, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link