Muthumani Chudare Vaa

ரஜினி uncle

முத்து மணி சுடரே, வா
முல்லை மலர் சரமே, வா

முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே வா
கண்ணுரங்க நேரமானதே
கண்ணே என் பொண்ணே தாலேலோ

முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே வா
கண்ணுரங்க நேரமானதே
கண்ணே என் பொண்ணே தாலேலோ

ம்ஹ்ம் நான் தூங்க மாட்டேன்
Uncle நான் ஒளிஞ்சுக்கிறேன்
என்ன புடிங்க பாக்கலாம்

ஆயிரம் பூவோடு பாடிடும் வண்டே
ஆசைகள் பூத்தாடும் தேன்மொழி எங்கே?
அழகாய் நாள்தோறும் புதுமை கொண்டாடும்
மலரே நீ பேசு
அவளைக் கண்டாயோ?
தானாக தள்ளாடும் பூவண்ணமே
தானாக தள்ளாடும் பூவண்ணமே
உடைகள் அணிந்து கனவு சுமந்து
நடந்த நிலவை நீயும் தேடுவாய்

ரஜினி uncle
நான் இங்க இருக்கேன்
இங்க, இங்க, ஹ-ஹ-ஹ

முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே வா
கண்ணுரங்க நேரமானதே
கண்ணே என் பொண்ணே தாலேலோ

காற்றினில் தேர் போல ஓடிடும் மானே
தன் வழி போனாளே கனிமொழி எங்கே?
அலை போல் பாய்ந்தோடும் முயலே நீ சொல்லு
தனியே பார்த்தாயோ அவளும் வந்தாளோ?

நான் தேடும் பொன்மாலை கண்டேனடி
நான் தேடும் பொன்மாலை கண்டேனடி
அசைந்து குலுங்கி சிரித்து சிரித்து
ஒளிந்த பதுமை நேரில் வந்தது

முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே வா
கண்ணுரங்க நேரமானதே
கண்ணே என் பொண்ணே தாலேலோ

முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே



Credits
Writer(s): Ilaiyaraaja, Na Kamarasan
Lyrics powered by www.musixmatch.com

Link