Sorkathin Vasapadi

சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்

பெண்ணல்ல நீ எனக்கு
வண்ணக் களஞ்சியமே
சின்ன மலர்க் கொடியே
நெஞ்சில் சிந்தும் பனித் துளியே

சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்

உன்னாலே உண்டாகும் ஞாபகங்கள்
ஒன்றிரண்டு அல்லவே
ஒன்றுக்குள் ஒன்றான நீரலைகள்
என்றும் இரண்டல்லவே

சிற்றன்ன வாசலின் ஓவியமே
சிந்தைக்குள் ஊறிய காவியமே
எங்கே நீ அங்கேதான் நானிருப்பேன்
எப்போதும் நீயாடத் தோள் கொடுப்பேன்

மோகத்தில் நான் படிக்கும்
மாணிக்க வாசகமே
நான் சொல்லும் பாடலெல்லாம்
நீ தந்த யாசகமே

சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்

பெண்ணல்ல நான் உனக்கு
வண்ணக் களஞ்சியமே
சிந்தும் பனித் துளியே
என்னைச் சேரும் இளங்கிளியே

சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்

உன்னாலே நான் கொண்ட காயங்களை
முன்னும் பின்னும் அறிவேன்
கண்ணாலே நீ செய்யும் மாயங்களை
இன்றும் என்றும் அறிவேன்

மின்சாரம் போல் எனை தாக்குகிறாய்
மஞ்சத்தை போர்க்களம் ஆக்குகிறாய்
கண்ணே உன் கண்ணென்ன வேலினமோ?
கை தொட்டால் மெய் தொட்டால் மீட்டிடுமோ?

கோட்டைக்குள் நீ புகுந்து
வேட்டைகள் ஆடுகிறாய்
நானிங்கு தோற்று விட்டேன்
நீ என்னை ஆளுகிறாய்

சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்

பெண்ணல்ல நீ எனக்கு
வண்ணக் களஞ்சியமே
சிந்தும் பனித் துளியே
என்னைச் சேரும் இளங்கிளியே

சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி



Credits
Writer(s): Ilaiyaraaja, Amaren Gangai
Lyrics powered by www.musixmatch.com

Link