Eerettu Pathinaaru

ஈரெட்டுப் பதினாறு
நின்றாடும் இளமாது
சிறு பூ மொட்டுப் பனி போல
கொண்டாட வரும் போது

சிலு சிலு பூங்காற்று நெஞ்சில் வந்து ஆட
பூப்போல முத்தம் இட்டு ஓட
ஹா தாங்காது பெண்மை அங்கம் மூட
தனி இடம் தேடாதோ என்னை வந்து கூட

ஈரெட்டுப் பதினாறு
நின்றாடும் இள மாது
சிறு பூ மொட்டுப் பனி போல
கொண்டாட வரும் போது

நாடாளும் மாமன்னன்
வீடாளும் மகராணி
நானாகும் நாள் என்னவோ?

தேரோட்டும் மகராஜன்
திருமேனி எங்கெங்கும்
உயிரோட்டம் நீயல்லவோ

பூ பாணம் கண்ணிரண்டும் போட
பொன் மேனி அம்மாடி ஆதி அந்தம் வாட

நான் வந்து அர்த்த ஜாமம் கூட
நாள் தோறும்
நீங்காமல் அங்கு வேதம் பாட
பாதாதி கேசம் சிலிர்க்கின்றதே
ஏதேதோ ஆசை துளிர்க்கின்றதே
மாமன்னன் கண் துஞ்சும்
பூ மஞ்சம் நீ

ஈரெட்டுப் பதினாறு
நின்றாடும் இள மாது
சிறு பூ மொட்டுப் பனி போல
கொண்டாட வரும் போது

ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ ஆஆ ஆஆஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ ஆஆ ஆஆஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ ஆஆ ஆஆஆ

பாலாடை போல் மின்னும்
பெண் பாவை உன் மீது
நூலாடை நானாகவா?

மேல் பாதி கீழ் பாதி
நீ தீண்ட நீ தீண்ட
சரி பாதி நானாகவா

காணாத இன்ப லோகம் காண
அந்நேரம் நாணாத பெண்மை கூட நாண
ஆண் வாடை பட்ட போது கூச
ஆனாலும் ஆனந்தத் தென்றல் ஒன்று வீச

ஆரம்பம் ஆகும் ஆலிங்கனம்
அலை பாய்ந்து ஆடும் ஆசை மனம்
என்னென்ன இன்பங்கள் நீ சொல்லித் தா

ஈரெட்டுப் பதினாறு
நின்றாடும் இள மாது
சிறு பூ மொட்டுப் பனி போல
கொண்டாட வரும் போது

சிலு சிலு பூங்காற்று
நெஞ்சில் வந்து ஆட
பூப்போல முத்தம் இட்டு ஓட

ஹா தாங்காது பெண்மை அங்கம் மூட
தனி இடம் தேடாதோ என்னை வந்து கூட

ஈரெட்டுப் பதினாறு
நின்றாடும் இள மாது
சிறு பூ மொட்டுப் பனி போல
கொண்டாட வரும் போது



Credits
Writer(s): Vaalee, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link