Ilamai Rathathil Iyarkai

இளமை ரதத்தில் இயற்கை சுகத்தில் இளங்கிளியே
அழகை ரசித்து விழியில் பதித்து படம் பிடியே
துள்ளும் இள மல்லிகையே அள்ளி வரும் புன்னகையே

மலர்க்கொடியே

(இளமை ரதத்தில் இயற்கை சுகத்தில் இளங்கிளியே)
(அழகை ரசித்து விழியில் பதித்து படம் பிடியே)

மலையில் ஓடும் (லல-லா-லல-லா)
மேகம் யாவும் (லல-லா-லல-லா)
பனியை தூவும் (லல-லா-லல-லா)
இனிமை சேரும் (லல-லா-லல-லா)

வெள்ளி ரதத்தினில் ஊர்வலமாய்
கன்னி குயில்களும் போய் வருமாம்
வெள்ளி ரதத்தினில் ஊர்வலமாய்
கன்னி குயில்களும் போய் வருமாம்
என்ன இது மாய லோகம் ஏறி செல்லும் மேகமே
என்னை அங்கு தூக்கி செல்லு தேடி வரட்டும் யோகமே

(தினம் தினம் சுதந்திரம்)
(சுகம் சுகம் நிரந்தரம், நிரந்தரம்)
(லா-லல-லா-லல-லா-லல-லா-லல)

இளமை ரதத்தில் இயற்கை சுகத்தில் இளங்கிளியே
அழகை ரசித்து விழியில் பதித்து படம் பிடியே
துள்ளும் இள மல்லிகையே அள்ளி வரும் புன்னகையே
துள்ளும் இள மல்லிகையே அள்ளி வரும் புன்னகையே
மலர்க்கொடியே

(இளமை ரதத்தில் இயற்கை சுகத்தில் இளங்கிளியே)
(அழகை ரசித்து விழியில் பதித்து படம் பிடியே)

குளிர்ந்த காற்றும் (லல-லா-லல-லா)
குழந்தை போல (லல-லா-லல-லா)
தவழ்ந்து மகிழ்ந்து (லல-லா-லல-லா)
தழுவ தழுவ (லல-லா-லல-லா)

முத்து பனித்துளி அங்கங்கு தான்
முத்தம் கொடுப்பதும் தித்திக்குதா
முத்து பனித்துளி அங்கங்கு தான்
முத்தம் கொடுப்பதும் தித்திக்குதா
புத்தகத்தை மறந்து கொஞ்சம் பூவை போல சிரிக்கலாம்
புத்தம் புது காலை நேரம் பாடி ஆடி களிக்கலாம்

(தினம் தினம் சுதந்திரம்)
(சுகம் சுகம் நிரந்தரம், நிரந்தரம்)
(லா-லல-லா-லல-லா-லல-லா-லல)

இளமை ரதத்தில் இயற்கை சுகத்தில் இளங்கிளியே
அழகை ரசித்து விழியில் பதித்து படம் பிடியே
துள்ளும் இள மல்லிகையே அள்ளி வரும் புன்னகையே
துள்ளும் இள மல்லிகையே அள்ளி வரும் புன்னகையே
மலர்க்கொடியே

(இளமை ரதத்தில் இயற்கை சுகத்தில் இளங்கிளியே)
(அழகை ரசித்து விழியில் பதித்து படம் பிடியே)

Credits
Writer(s): Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link