Mangala Vaanam

மங்கல வானம் குங்குமம் தீட்டும் மன்மத நேரம் இது
சூரியன் மீது சந்தனம் அள்ளி யாரது பூசியது
மாளிகை தேவதை வாடியதோ தென்றல் தேடி

மாலையில் தாமரை ஏங்கியதோ
என்னை எண்ணி மாளிகை தேவதை வாடியதோ
தென்றல் தேடி மாலையில் தாமரை ஏங்கியதோ
மங்கல வானம் குங்குமம் தீட்டும் மன்மத நேரம் இது

பாவை இவள் பாதம் பட்டால் பாதைக்கும் மோகம் வரும்
ராஜன் மகன் தொட்டுவிட்டால் ஆடைக்கும் ஆசை வரும்
பாவை இவள் பாதம் பட்டால் பாதைக்கும் மோகம் வரும்
ராஜன் மகன் தொட்டுவிட்டால் ஆடைக்கும் ஆசை வரும்
உனை மூடும் அந்த ஆடை பல சேதி அறியும்
நீ கேட்டால் உனக்காக அது சீதனம் ஆகிவிடும்

மங்கல வானம் குங்குமம் தீட்டும் மன்மத நேரம் இது

பூவிரித்த சாலை எங்கும் மேகங்கள் ஊர்வலங்கள்
கூந்தலினை கோதிவிடும் ஆயிரம் பூமரங்கள்
பூவிரித்த சாலை எங்கும் மேகங்கள் ஊர்வலங்கள்
கூந்தலினை கோதிவிடும் ஆயிரம் பூமரங்கள்
புவி யாவும் மலர் தூவும் அதில் மேனி வலிக்கும்
அந்தி மாலை இந்த மாலை எந்தன் மார்பினில் ஓய்வெடுக்கும்

(மங்கல வானம் குங்குமம் தீட்டும் மன்மத நேரம் இது)
(சூரியன் மீது சந்தனம் அள்ளி யாரது பூசியது)
(மாளிகை தேவதை வாடியதோ) தென்றல் தேடி
(மாலையில் தாமரை ஏங்கியதோ) என்னை எண்ணி
(மாளிகை தேவதை வாடியதோ) தென்றல் தேடி
மாலையில் தாமரை ஏங்கியதோ

(லா-லல்ல-லால)
(லா-லல்ல-லால)
(லா-லல-லா-லல-லா)

Credits
Writer(s): Ilaiyaraaja, Kabilan Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link