Mudhala

கரைபுரண்டு ஓடும் ஆறாய் நெஞ்சமாவதேன்
விழி இரண்டும் என்னுள் பாய்ந்தே மீன்களாவதேன்
நுரைகள் யாவும் நிலவாக
என் மேல் வீழும் வானாய் ஆனாய்
மண் மேல் பூக்கும் தீயாய் ஆனாய்
நாவில் தாவும் மானாய்
போதை தூவும் தேனாய் ஆனாய்

கரைகளாய் இரண்டாகிடும் மனம்
அலைகளாய் எழுந்தே விழும் கணம்
அதன் மேல் போகும் படகானாய்

எண்ணம் சொல்லும் சொல்லைக் கேட்டு
உந்தன் தேகம் வளைவது போல்
உந்தன் கண்ணின் சொல்லைக் கேட்டு
எந்தன் வாழ்க்கை வளைகிறதோ

ரெண்டு வேறு நிறுவனங்கள்
ஒன்று சேர்ந்து இணைவது போல்
உந்தன் நெஞ்சும் எந்தன் நெஞ்சும்
ஒப்பந்தம் போடுதோ

நேற்றும் பூங்காற்றும் வெண்ணிலாக் கீற்றும்
யாவும் வேறாகத் தோன்றுதோ
மின்னும் பொன்விண்ணும் பின்பு என் மண்ணும்
கண்முன் காணாமல் போகுதோ
மாற்றுகின்றாய் (மாற்றுகின்றாய்)
மாறுகின்றேன் (மாறுகின்றேன்)
போதுமா காதலே (போதுமா காதலே)

மடை திறந்து பாயும் நீராய் காதல் காண்கிறேன்
சிறகிரண்டும் என்னுள் தோன்றி வானில் பாய்கிறேன்
முகில்கள் யாவும் நிறம் மாற (முகில்கள் யாவும் நிறம் மாற)
எல்லை இல்லா வானாய் ஆனாய்
என்னை கொஞ்சும் காற்றாய் ஆனாய்
நாணம் கொள்ளும் ஆணாய் (ஓ-ஓ)
எந்தன் நாவில் தேனாய் ஆனாய் (ஆனாய்)

முதலா
முடிவா
இடமா
வலமா-ஹோ-ஒ
தொடவா
விடவா
இறைவா-ஹோ



Credits
Writer(s): Madhan Karky, Nivas K Prasanna
Lyrics powered by www.musixmatch.com

Link