Maayaathi Vaanaathi

ஓம்
ஓம்

மாயாதி வானாதி விண்ணீஷ்வராயா
முக்கண்ணை உடையோனே கைலாச நாதா
ஆதாரம் நீ தானே திகம்பராயா
அன்பான தந்தை நீ நமச்சிவாயா

புல்லாகி பூண்டாகி நீயும் வந்து நின்றாய்
ஆலாகி வேலாகி நீயும் நின்று காத்தாய்
மந்தார முக்ய பஹு புஷ்ப சுபூஜிதாயா
என் தாயே தந்தையே வடபழனி வேங்கீஸ்வராயா

இப்போது இங்கே தான் எல்லாமே போச்சு
பொல்லாத அரக்கர்கள் செய்கின்றார் ஆட்சி
பக்தர்கள் படுகின்ற கஷ்டங்கள் நீக்கு
சூலத்தை ஏந்தி தான் சூட்சிகள் போக்கு
நீரின்றி சிவன் இன்றி மண் இங்கு ஏது?
உன் நாமம் இல்லாமல் நாங்கள் தான் ஏது?

சுடுகாட்டில் வாழ்கின்ற சுடலமாட சாமி
இடுகாட்டை தாண்டி நீ விரைவாக வா வா

ஈரேழு லோகத்தை வென்றாயே ஈசா
ஆகாயம் நீ தானே ஆதிசிவ நாதா
நாடெல்லாம் நலமாக ரௌத்ரத்தை காட்டு
பக்தனார் ஈஷ்வரர் தாண்டவமாடிடு ஈஸ்வரனே-ஹா

பஞ்சாக்ஷ்ர மிதம் புண்யம் யஹ் படேத் சிவசன்னிதௌ
சிவலோக மவாப்னோதி சிவேன சஹ மோததே

பஞ்சமுகி அம்மா பஞ்சமுகி
பஞ்சமுகி அம்மா பஞ்சமுகி
பஞ்சமுகி அம்மா பஞ்சமுகி
பஞ்சமுகி அம்மா பஞ்சமுகி
பஞ்சமுகி அம்மா பஞ்சமுகி
பஞ்சமுகி அம்மா பஞ்சமுகி
பஞ்சமுகி அம்மா பஞ்சமுகி
பஞ்சமுகி அம்மா பஞ்சமுகி



Credits
Writer(s): Tamizh Amudhan, Chinna
Lyrics powered by www.musixmatch.com

Link