Kurumugil (From "Sita Ramam (Tamil)")

குருமுகில்களை சிறு முகைகளில் யார் தூவினார்
மழைக் கொண்டு கவிதை தீட்டினார்
இளம் பிறையினை இதழிடையினில் யார் சூட்டினார்
சிரித்திடும் சிலையை காட்டினார்

எறும்புகள் சுமந்து போகுதே
சர்க்கரைப் பாறை ஒன்றினை
இருதயம் சுமந்து போகுதே
இனிக்கிற காதல் ஒன்றினை
என் சின்ன நெஞ்சின் மீது
இன்ப பாரம் ஏற்றி வைத்ததார்

முயல் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா
வானோடு தீட்டி வைத்ததார்?
தரை இறங்கி வந்து ஆடுகின்றதே
நிலாவைக் கூட்டி வந்ததார்?

கம்பன் சொல்ல வந்து
ஆனால் கூச்சங் கொண்டு
எழுதா ஓர் உவமை நீ
வர்ணம் சேர்க்கும் போது
வர்மன் போதைக் கொள்ள
முடியா ஓவியமும் நீ

எல்லோரா சிற்பங்கள் உன் மீது காதலுறும்
உயிரே இல்லாத கல் கூட காமமுறும்
உன் மீது காதல் கொண்ட
மானுடன் தான் என்ன ஆகுவான்

முயல் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா
வானோடு தீட்டி வைத்ததார்?
தரை இறங்கி வந்து ஆடுகின்றதே
நிலாவைக் கூட்டி வந்ததார்?

உடையால் மூடி வைத்தும்
இமைகள் சாத்தி வைத்தும்
அழகால் என்னைக் கொல்கிறாய்
அருவிக் கால்கள் கொண்டு
ஓடை இடையென்றாகி
கடலாய் நெஞ்சம் கொள்கிறாய்

கடலில் மீனாக நானாக ஆணையிடு
அலைகள் மீதேறி உன் மார்பில் நீந்தவிடு
பேராழம் கண்டுக்கொள்ள ஏழு கோடி
ஜென்மம் வேண்டுமே

முயல் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா
வானோடு தீட்டி வைத்ததார்?
தரை இறங்கி வந்து ஆடுகின்றதே
நிலாவைக் கூட்டி வந்ததார்?



Credits
Writer(s): Chandrasekar Vishal, Karky Vairamuthu Madhan
Lyrics powered by www.musixmatch.com

Link