Thumbi Thullal

கொஞ்சும் சிந்தூர சிங்காரா கிண்ணார
பூந்தென்றலாய் வன்னூ
மது மனமோ மதுமனமோ மதுமனமோ
மது மனமோ...

தும்பி தும்பி தும்பி துள்ளல்லோ
இன்றோ இன்றோ தும்பி துள்ளல்லோ
ஓ ஹோ... ஜல ஜல் ஜல ஜல் மணியே
அவனிடம் இடை இறங்கிடு மணியே
தனியே தனியே தனியே
அவன் உலகினில் நான் மட்டும் தனியே
என் கள்ள சிரிப்பின் நீளம் நீயே

தும்பி தும்பி தும்பி துள்ளல்லோ
ஓ ஓ இன்றோ இன்றோ தும்பி துள்ளல்லோ

கொஞ்சும் சிந்தூர சிங்காரா கிண்ணார
பூந்தென்றலாய் வன்னூ

கண் தூங்கும் நேரத்தில்
நீ நீங்க கூடாது
காதோரம் உன் மூச்சின் தீ வேண்டுமே
தொடும் எல்லாமே தீயென தீ மாற்றுமே
அதுபோல் தீண்ட நீ என நான் வேண்டுவேன்

தும்பி தும்பி தும்பி துள்ளல்லோ
ஓ... இன்றோ இன்றோ தும்பி துள்ளல்லோ

காரணங்கள் ஏதும் தெரியாமல்
நாட்கள் போக கண்டேனே
உன்னிடம் வந்தேன் அந்த நொடியே
ஓர் அர்த்தம் சேர்ந்ததே
ஒரு கணம் கூட விலகாமல் உயிராவேன்
இறுதி வரை கைகள் நழுவாமல் ஏந்துவேன்

ஆண் அழகன் காலு நம்ம பக்கம்
கண்ணு மட்டும் பேரழகி பக்கம்
நம்ம சத்தம் காதில் விழ வில்லையே
வெடிக்கும் பீரங்கி கொண்டு வரணும்

நீங்க தர வேணும் நூறு புள்ள
அய்யோ... போதவில்லை
உங்க பொறுப்பில் நம்ம
ஜனத்தொகை இருக்குது

தும்பி தும்பி தும்பி துள்ளல்லோ
ஹா... ஆ... இன்றோ இன்றோ தும்பி துள்ளல்லோ
ஓ ஹோ ஜல் ஜல் ஜல ஜல் மணியே
அவனிடம் இடை இறங்கிடு மணியே
தனியே தனியே தனியே
அவன் உலகினில் நான் மட்டும் தனியே
என் கள்ள சிரிப்பின் நீளம் நீயே...



Credits
Writer(s): A R Rahman, Vivek, Jithin Raj
Lyrics powered by www.musixmatch.com

Link