Koodapporantha

கூடப்பொறந்த சொந்தமே
ஏன் என்ன தனியாக விட்டு போனியோ
வாழ பொறந்த செல்வமே
வாழாம வாழ்வ முடிச்சு போனியோ

நீரோடு தாமரை போலே
ஊரோடு உன் உறவு
ஒட்ட வில்லையே ஒட்டி இருந்ததில்லையே

வானோடு தாரகை போலே
உன்னோடு என் உறவு
எட்ட வில்லையே எட்டி இருக்க வில்லையே

உறவு மொறை மிருகமெல்லாம்
துரத்தியதோ உன்ன படுத்தியதோ
பெத்தவளும் இல்ல உத்தவளும் இல்ல
மனசு ஒப்ப வில்ல என் உசுரும் இப்ப இல்ல

கிழக்கு மேற்கு எங்க
தெக்கு வடக்கு எங்க
திக்கு தெச எங்க
என் திக்கு தெச எங்க

கூடப்பொறந்த சொந்தமே
ஏன் என்ன தனியாக விட்டு போனியோ
வாழ பொறந்த செல்வமே
வாழாம வாழ்வ முடிச்சு போனியோ



Credits
Writer(s): Ilaiyaraaja, Vaasan
Lyrics powered by www.musixmatch.com

Link