Un Paarvai

உன் பார்வை என் பார்வை
வாய் பேசுதே மௌனமாய்
உன்னாலே என் வாழ்க்கை
உண்டானதே வண்ணமாய்

தனியாய் இருந்த நானே
எனயே மறந்து போனேன்
இவளாலே இவளாலே என் ஆசையோ மிஞ்சுமே
விரலோடு விரல் கோர்த்து விளையாடுதே நெஞ்சமே

இதழினில் இதழ் பதிக்க
இருவிழி இமை துடிக்க
இரவிலும் நான் விழித்து இருந்தேன்
உயிரினில் உலை கொதிக்க
உடலினில் அலை அடிக்க
பகலிலும் நான் உறங்க மறந்தேன்

உனக்காக நானே உயிர் வாழுவேனே
மன தோளிலே தாங்குவேன்
உன் கூந்தல் கேட்கும் சிறு பூவுக்காக
ஒரு தோட்டத்தை வாங்குவேன்

அருகே இருந்தா அது போதும் எனக்கு
தருவேன் தருவேன் ஒரு ஜீவன் உனக்கு
இருந்தாலும் இறந்தாலும்
பிரியாமல் இருப்பேன்

உன் பார்வை என் பார்வை
வாய் பேசுதே மௌனமாய் மௌனமாய்
உன்னாலே என் வாழ்க்கை
உண்டானதே வண்ணமாய் வண்ணமாய்

தனியாய் இருந்த நானே
எனயே மறந்து போனேன்
இவளாலே இவளாலே என் ஆசையோ மிஞ்சுமே
விரலோடு விரல் கோர்த்து விளையாடுதே நெஞ்சமே



Credits
Writer(s): Kabilan, Ranjin V K
Lyrics powered by www.musixmatch.com

Link