Kaatril Aadum Deepam - From "Kaarottiyin Kaadhali"

காற்றில் ஆடும் தீபம் போல
கண்ணில் தோன்றும் உறவே
நீலம் பூத்த வானம் போல
நெஞ்சில் நீந்தும் நினைவே

ஏழை வீடு என அறிந்தும்
கோலம் போடும் நிலவொளியே
முள்ளில் தூக்கி எறியையிலும்
பூவாய் ஆகும் ஒரு விதையே

வெட்டவெளி பாதையிலே
வரும் உன் நினைவு மோதிடுதே
கொத்துகிற பாம்பெனவே
கொண்ட நேசம் உயிர் வாங்கிடுதே

காற்றில் ஆடும் தீபம் போல
கண்ணில் தோன்றும் உறவே
நீலம் பூத்த வானம் போல
நெஞ்சில் நீந்தும் நினைவே

நீரிலே பால் நிலா
மூழ்கிய போதிலும்
ஈரமே ஆவதில்லையே
காகித பூவிலும்
வாசனை உண்டென
வாழ்வது பாவம் இல்லையே

கல்லும் ஒரு கோயில் சேர தெய்வமாகுதே
உள்ளே எழும் நேசத்தாலே பூமி வாழுதே

சொல்ல முடியா சொந்தம் உனையே
தள்ளி விட மாட்டேனே
உள்ள வரையில் உன்னை நினைத்தே
நட்சத்திரம் பார்பேனே

கோடையில் நீரையும்
வாடையில் தீயையும்
தேடியே வாழ்க்கை ஓடுதே
சாம்பலே ஆயினும்
நெற்றியில் சேரயில்
பூசையாய் மாறிப்போகுதே

எல்லைகளை தாண்டும் காலம் உனைச் சேருதே
புல்லின் நுனி மேலே கூட தூரல் தேங்குதே

கண்கள் அறியா சித்திரங்களை
என்னுயிரும் காணாதோ?
சுத்தும் உலகில் அன்பின் அழகே
சொந்தமென ஆகாதோ?

காற்றில் ஆடும் தீபம் போல
கண்ணில் தோன்றும் உறவே
நீலம் பூத்த வானம் போல
நெஞ்சில் நீந்தும் நினைவே



Credits
Writer(s): N.r.raghunanthan, Yugabharathi
Lyrics powered by www.musixmatch.com

Link