Nenjellam (From "Sinam")

நெஞ்செல்லாம் மோதி மோதி
எனில் பாய்ந்திடும் காதலே!
பேசாத வாசம் போலே
எனில் பாய்ந்திடும் காதலே!

இதன் முன்னே சிந்தாத மழையே
இதயத்தில் ஏன் வீழ்கிறாய்
இதன் முன்னே நில்லாத நொடியே
யுகம் ஒன்றாய் ஏன் நீள்கிறாய்

உறவேதும் இல்லாமல்
குறை ஏதும் சொல்லாமல்
தனியாக வாழ்ந்தேனே
பிறகுன்னை கண்டேனே

எந்தன் பூமி நீ என்று
கடல் யாவும் நீ என்று
உனை கண்டு கொண்டேனே
எனில் ஊறி கொண்டேனே

நெஞ்செல்லாம் மோதி மோதி
எனில் பாய்ந்திடும் காதலே
பேசாத வாசம் போலே
எனில் பாய்ந்திடும் காதலே

நெஞ்செல்லாம் மோதி மோதி
எனில் பாய்ந்திடும் காதலே
பேசாத வாசம் போலே
எனில் பாய்ந்திடும் காதலே

நெஞ்செல்லாம் மோதி மோதி

புயல் காற்றில் குடை போல்
என் வாழ்வினை தலைகீழ்
என்றே மாற்றினாய்
குடை கம்பி வளைகின்ற
வேளையில் நனைத்தாயே
தூறல்களாய்

காதல் ஈரம் காய
ஆசை தீயானாய்
தீயின் வெப்பம் ஆற
முதனின்று மறுபடி
தொடங்குகிறாய்

முடிவேதும் இல்லாமல்
தொடர்ந்திடு
இளைப்பாற நில்லாமல்
பறந்திடு
ஒரு வார்த்தை சொல்லாமல்
அணைத்திடு
விழியாலே கொல்கின்றாய்
கனவிதுவா ஹா... ஆஆ

இது தான் அன்று நான் கண்ட கனவு
முழுதாய் இன்று மெய்யாகுது
இது தான் அன்று நான் கேட்ட உலகு
அழகாய் இங்கு உண்டானது

நகை ஏதும் வேண்டாமே
புது சேலை வேண்டாமே
கெட்டி மேளம் வேண்டாமே
இரு நெஞ்சம் ஒன்றாக

நெஞ்செல்லாம் மோதி மோதி
எனில் பாய்ந்திடும் காதலே
பேசாத வாசம் போலே
எனில் பாய்ந்திடும் காதலே

நெஞ்செல்லாம் மோதி மோதி
எனில் பாய்ந்திடும் காதலே
நெஞ்செல்லாம் மோதி மோதி



Credits
Writer(s): Shabir, Karky
Lyrics powered by www.musixmatch.com

Link