Pengal Nenjai

பெண்கள் நெஞ்சைக் கொள்ளைகொள்ளும் வெள்ளை மாதவா
உதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை போடவா
உன்னிடத்தில் உள்ளதெல்லாம் அள்ளிக்கொள்ளவா
உன் உடம்புக்குள் உயிர் மட்டும் விட்டுச் செல்லவா

உன் வேரோடு மழை சிந்த வரவா
உன் வெட்கத்தை குளிப்பாட்ட வரவா
குளிப்பாட்டி அழுக்காக்கவா
ஏய் படவா
நீ தொடவா - நான் தொடவா
ஹேய் மாதவா

பெண்கள் நெஞ்சைக் கொள்ளைகொள்ளும் வெள்ளை மாதவா
உதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை போடவா
உன்னிடத்தில் உள்ளதெல்லாம் அள்ளிக்கொள்ளவா
உன் உடம்புக்குள் உயிர் மட்டும் விட்டுச் செல்லவா
ஹேய் சண்டை போடவா
ஹேய் விட்டுச் செல்லவா

லாய்லலாய் லாய்லலாய் லாய்லலாய் லாய் லாய்லாய் யேய்
லாய்லலாய் ஓஹோஹோ லாய்லலாய் ஓஹோஹோ லாய்லலாய் லாய் லாய்லாய் யேய்

மொட்டுக்கெல்லாம் தும்மல் வந்தால் மலர்ந்துவிடும்
மோகம் வந்தால் பெண்ணின் உள்ளம் திறந்துவிடும்
முட்டைக்குள்ளே மஞ்சளுக்கு கொழுப்பிருக்கும்
உன் முடிமுதல் கால்வரை கொழுப்பிருக்கும்

விழிகள் அளந்தால் இலக்கணம் இருக்கும்
விரல்கள் அளந்தால் இலக்கியம் இருக்கும்
பட்டுக்கைகளால் நீ தொட்டுக்கிடந்தால்
பாறையும் இளமை சுரக்கும்
பாலாற்றில் நீராட்டவா

ஹேய் படவா (படவா படவா)
நீ தொடவா (தொடவா தொடவா)
நான் தொடவா (தொடவா தொடவா)
ஹேய் மாதவா (மாதவா)

பெண்கள் நெஞ்சைக் கொள்ளைகொள்ளும் வெள்ளை மாதவா
உதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை போடவா
உன்னிடத்தில் உள்ளதெல்லாம் அள்ளிக்கொள்ளவா
உன் உடம்புக்குள் உயிர் மட்டும் விட்டுச் செல்லவா

கண்ணு காது மூக்கு மட்டும் தொட்டுவிட்டு போ
கற்பை மட்டும் கொஞ்ச காலம் விட்டுவிட்டு போ
தொலைந்த என் தூக்கம் எங்கே தந்துவிட்டு போ
தலையணை சுகம் இல்லை சொல்லிவிட்டு போ

பதினெட்டு வருடம் பளுத்த என் அழகு
பதினெட்டு நொடியில் சமர்ப்பணம் உனக்கு
உன்னை கலந்தால் முன்னூறு வருஷம்
நான் கொண்ட இளமை நிலைக்கும்
மூச்சத்தில் மூப்பேதடா

படவா
நீ தொடவா - நான் தொடவா
ஹேய் மாதவா வா

பெண்கள் நெஞ்சைக் கொள்ளைகொள்ளும் வெள்ளை மாதவா
உதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை போடவா
உன்னிடத்தில் உள்ளதெல்லாம் அள்ளிக்கொள்ளவா
உன் உடம்புக்குள் உயிர் மட்டும் விட்டுச் செல்லவா

உன் வேரோடு மழை சிந்த வரவா
உன் வெட்கத்தை குளிப்பாட்ட வரவா
ஏய் குளிப்பாட்டி அழுக்காக்கவா
படவா
நீ தொடவா - நான் தொடவா
ஹேய் மாதவா

Credits
Writer(s): Bharadwaj, Vairamuthu Ramasamy Thevar
Lyrics powered by www.musixmatch.com

Link