Turukky Azhaki (feat. Santhosh HARIHARAN)

துருக்கி அழகி விரிச்ச வலையில் கிறங்கி விழுந்தேனே
பருத்தி இதழை சுவைத்த பொழுதில் மயங்கி கிடந்தேனே

துருக்கி அழகி விரிச்ச வலையில் கிறங்கி விழுந்தேனே
பருத்தி இதழை சுவைத்த பொழுதில் மயங்கி கிடந்தேனே

அவள் உச்சுக்கொட்டி சிரித்தாலே என் நெஞ்சறைகள் உயிர்க்கிறதே
அவள் கைகள் தட்டி அழைத்தாலே மனம் வண்ணமாய்ப் பறக்கிறதே

அச்சச்சோ புன்னகையோ தித்திக்கும் தீச்சுவடு
அச்சச்சோ அவள் தேகம் நீரூறும் பாலைவனம்

இஸ்தான்புல் தலைநகரோ அங்காரா தாய்வீடோ
ஹய்சாரி தேவதையோ மண்ணில் வாழும் நிலவிதுவோ

துருக்கி அழகி விரிச்ச வலையில் கிறங்கி வீழ்ந்தேனே
பருத்தி இதழை சுவைத்த பொழுதில் மயங்கி கிடந்தேனே

உயிர்க்குதே உயிர் உயிர்க்குதே, உடல் சிலிர்க்குதே அவள் முகப்பில்
வலிக்குதே மனம் வலிக்குதே கரம் துளிர்க்குதே அவள் வனப்பில்

சாலையோரத்தில் அவள் லீலை பார்க்கின்றேன்
ஓலைச் சுவடுகளில் அவள் ரேகை பார்க்கின்றேன்

மர்வான் கூரி ஏன் பாடவில்லை இவளை
அழகின் தேசம் என்று கூறவில்லை இவளை

அச்சச்சோ புன்னகையோ தித்திக்கும் தீச்சுவடு
அச்சச்சோ அவள் தேகம் நீரூறும் பாலைவனம்

தளதள என வளர்ந்ததேன் இவள் மலர்ந்ததேன் என பயந்தேன்
இதழ்களோ பலாச்சுவைகளோ எனச் சுவைத்தபின் நான் வியந்தேன்

காலை வேளைகளில் இவள் தூக்கம் கலைகின்றாள்
மேலை நாடுகளில் பலர் தூக்கம் தொலைக்கின்றாள்

பொய்யா மொழியில் இவள் அரபு நாட்டுக் கவிதை
எந்தன் விழியில் இவள் ஒ ஒ ஒ ஒ ஒ ஓ

அச்சச்சோ புன்னகையோ தித்திக்கும் தீச்சுவடு
அச்சச்சோ அவள் தேகம் நீரூறும் பாலைவனம்

இஸ்தான்புல் தலைநகரோ அங்காரா தாய்வீடோ
ஹய்சாரி தேவதையோ மண்ணில் வாழும் நிலவிதுவோ

Credits
Writer(s): Nanthagoban Sriskantharajah
Lyrics powered by www.musixmatch.com

Link